இந்த 3 பெரிய நகரங்களை மனதில் வைத்துகோங்க.. NRI-களால் முதலீட்டாளர்களுக்கு சூப்பர் சான்ஸ்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைத்ராபாத், என்சிஆர் மற்றும் பெங்களூர் உள்ளிட்ட பெரும் நகரங்கள் மக்களின் விருப்பமான முதலீட்டு தளங்களாக மாறி வருகின்றன.

இந்தியாவில் என்ஆர்ஐ (NRI)-களுக்கு விருப்பமான நகரங்களாக மேற்கண்ட மூன்று நகரங்களும் உள்ளதாக, ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றது.

ஏனெனில் ஒரு சொத்தில் முதலீடு செய்வதாக இருந்தால், என் ஆர் ஐ-க்கள் இந்த மூன்று நகரங்களுக்குள் அதிகம் தேர்தெடுப்பதாக அனராக் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

எலான் மஸ்க் 'war room'-ல் 50 ஸ்பெஷல் ஊழியர்கள்.. யார் இவர்கள்..? பட்டை தீட்டப்படும் டிவிட்டர்..! எலான் மஸ்க் 'war room'-ல் 50 ஸ்பெஷல் ஊழியர்கள்.. யார் இவர்கள்..? பட்டை தீட்டப்படும் டிவிட்டர்..!

கடந்த ஆண்டு நிலவரம்?

கடந்த ஆண்டு நிலவரம்?

கடந்த ஆண்டில் இதே ஆய்வறிக்கையில் பெங்களூரு, புனே மற்றும் சென்னை உள்ளிட்ட நகரங்கள் என்ஆர்-களின் சிறந்த தேர்வாக இருந்தன.

இதற்கு காரணம் ரியல் எஸ்டேட் சந்தையில் ரூபாயின் மதிப்பில் ஏற்றப்பட்ட சரிவு என்றும் கூறப்படுகிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் எனில் இந்தியர்களின் விருப்பமான ரியல் எஸ்டேட் முதலீட்டு தளமாக பார்க்கப்படும் மும்பை 4வது இடத்தில் உள்ளது.

 

60% பேரின் விருப்பம்

60% பேரின் விருப்பம்

அறிக்கையின் படி, 60% என் ஆர் ஐ- களில் இந்த மூன்று நகரங்களில் வீடு வாங்க தயாராக உள்ளனராம்.. 22% பேர் ஹைத்ராபாத்தில் கவனம் செலுத்துக்கிறார்கள். 20% பேர் என் சி ஆரிலும், 18% பேர் பெங்களூரினையும் விரும்புகின்றனர்.

எந்தெந்த நாடுகளில் பணி?
 

எந்தெந்த நாடுகளில் பணி?

இந்த ஆய்வானது 5500 பேரிடம் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 7% பேர் தற்போது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வளைகுடா நடுகளிலும், ஆசிய நாடுகளிம் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் கொரோனாவுக்கு முன்பு பெங்களூர், ஹைத்ராபாத் மற்றும் என்சிஆர் விருப்பமான தேர்வாக இருந்தாலும், கொரோனா காலகட்டத்தில் பெங்களூர், புனே மற்றும் சென்னை விருப்பமான இடங்களாக இருந்தன.

வீடுகளே சிறந்த முதலீடு

வீடுகளே சிறந்த முதலீடு

என் ஆர் ஐ-க்கள் அதிகளவில் பங்கு சந்தைகள், மியூச்சுவல் ஃபண்டுகள் மற்றும் தங்கம், பிக்சட் டெபாசிட்கள் உள்ளிட்டவற்றை விட, ரியல் எஸ்டேட் முதலீடுகளிலேயே அதிகம் விரும்புவதாகவும் தெரிய வந்துள்ளது.

நடப்பு ஆண்டின் முதல் பாதியில் 71% என் ஆர் ஐ-க்கள் இந்திய வீடுகளே சிறந்த முதலீடாக நம்புகின்றனராம். தற்போது ரியல் சந்தையானது கொரோனாவுக்கு முன்பை விட 55% அதிகரித்துள்ளது.

பாதுகாப்பான முதலீடு வீடு தான்

பாதுகாப்பான முதலீடு வீடு தான்

மொத்தத்தில் இந்தியா முழுவதுமே பாதுகாப்பான வீடுகள் தான் முக்கிய முதலீட்டு அம்சமாக பார்க்கப்படுகிறது. உள்நாட்டு சந்தையில் வட்டி அதிகம், வீடு விலைகள் அதிகம் என்று இருந்தாலும் கூட, என் ஆர் ஐ-க்கள் வீடுகளையே முக்கிய முதலீடுகளாக பார்க்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் ரூபாய் சரிவு என்றும் கூறப்படுகிறது.

9 மாத நிலவரம்

9 மாத நிலவரம்

நடப்பு ஆண்டின் முதல் 9 மாதங்களில் கடந்த ஆண்டினை காட்டிலும் என்ஆர்ஐ-களின் வீடு தேவையானது 15 - 20% அதிகரித்துள்ளது. அனராக் அறிக்கையின் படி ஜனவரி - செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 2.73 லட்சம் வீடுகள் டாப் 7 நகரங்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இதில் அனைத்து காலாண்டுகளிலும் என் ஆர் ஐ-களின் பங்கு 10 - 15% ஆக உள்ளது.

தேவை அதிகரிப்பு

தேவை அதிகரிப்பு

கொரோனாவின் வருகைக்கு பிறகு பள்ளிகள் தொடங்கி விட்டன. வீட்டில் இருந்து பணியாற்றிய ஊழியர்கள் அலுவலகம் வந்து பணியாற்ற தொடங்கி விட்டனர். எனினும் இன்றும் பல்வேறு ஐடி நிறுவனங்களில் ஹைபிரிட் பணி மாடல் கடைபிடிக்கப்படுகின்றது. இது ஊழியர்களுக்கான இடத் தேவையை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஐடி ஊழியர்கள் அதற்கேற்ப பெரிய பெரிய வீடுகளை தேர்வு செய்து வருகின்றனர்.

எத்தனை பெட்ரூம் கொண்ட வீடுகள்?

எத்தனை பெட்ரூம் கொண்ட வீடுகள்?

இந்த ஆய்வறிக்கையில் 77% என் ஆர் ஐ-க்கள் பெரிய வீடுகளை தேர்வு செய்வதாகவும், 54% பேர் மூன்று பெட்ரூம் கொண்ட வீடுகளையும், 23% பேர் 4 பெட்ரூம் கொண்ட வீடுகளை தேர்வு செய்வதாகவும், 22% என் ஆர் ஐ-க்கள் இரண்டு பெட்ரூம் வீடுகளையும் தேர்வு செய்கின்றனராம். கொரோனாவுக்கு முன்னதாக 40% 2 பெட்ரூம் கொண்ட வீடுகளை தேர்வு செய்த நிலையில் தற்போது அது குறைந்துள்ளது.

சொகுசு பங்களாக்கள்

சொகுசு பங்களாக்கள்

63% என் ஆர் ஐ-க்கள் 90 - 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான பிரீமியம் வீடுகளை தேர்வு செய்வதாகவும், 59% என் ஆர் ஐ-க்கள் 1.5 கோடி ரூபாய் முதல் 2.5 கோடி ரூபாய் வரையிலான பிரீமியம் வீடுகளை தேர்வு செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச நிலவரம்

சர்வதேச நிலவரம்

பல என் ஆர் ஐ-க்களும் இந்தியா திரும்பியதும் இந்த வீடுகளை பயன்படுத்த விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தைகளில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில், இந்தியா பரவாயில்லை என்று கூறும் நிபுணர்கள், 3 நகரங்கள் ரியல் எஸ்டேட் விலை அதிகரிக்கலாம் என்பதையும் சூசகமாக கூறியுள்ளனர் எனலாம். இதனால் என் ஆர் ஐ-க்கள் மட்டும் அல்ல, சாதரண மக்களும் இந்த நகரங்களில் கவனம் செலுத்தலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hyderabad, NCR, bangalore cities are big on NRI property wish list

Surveys reveals that major cities including Hyderabad, NCR and Bangalore are the preferred cities for NRIs in India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X