ஹைதராபாத்: சமீப காலமாகவே வாடகை கார் ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களின் வித்தியாசமான செயல்முறைகளுக்காக சமூக வலைதளங்களில் டிரெண்டாகிவிடுகின்றனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் ஒரு வாடகை காரில் ஒட்டப்பட்டுள்ள நோட்டீஸ் தற்போது பேசு பொருளாகி இருக்கிறது.
ஹைதராபாத்தில் வாடகை காரில் பயணம் செய்த ஒருவர் அந்த காரில் ஒட்டப்பட்டிருந்த நோட்டீஸை புகைப்படமாக எடுத்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. ஹாய் ஜதராபாத் பக்கத்திலும் இந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

அதில், எச்சரிக்கை, நோ ரொமான்ஸ் இது கார் என அச்சிடப்பட்டுள்ளது . இது உங்களின் தனிப்பட்ட இடமோ அல்லது ஓயோ ரூமோ கிடையாது இது கார் தயவுசெய்து இடைவெளியை கடைப்பிடித்து அமைதியாக இருங்கள் என அதில் எழுதப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பலரது பார்வையையும் பெற்றுள்ளது.
ஒரு பயனர் இதற்கு முன்பு பெங்களூரு, டெல்லியில் மட்டும் தான் வாடகை கார்களில் இப்படி நோட்டீசை நான் பார்த்திருக்கிறேன் தற்போது ஹைதராபாத்திலும் இப்படி ஒரு நிலைமை வந்து விட்டதா என கருத்து தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர் இந்த வாடகை கார் ஓட்டுநர் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் கனிவான முறையில் தன்னுடைய கோரிக்கையை முன் வைத்திருக்கிறார் என பதிவு செய்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு கூட இதே போல ஒரு பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது.
பெங்களூரை சேர்ந்த ஒரு வாடகை கார் ஓட்டுநர் தன்னுடைய காரில் பயணம் செய்பவர்கள் குறிப்பிட்ட சில விதிகளை பின்பற்ற வேண்டும் என குறிப்பிட்டு நோட்டீஸாக ஒட்டி இருந்தார். அந்த காரில் பயணம் செய்த ஒருவரால் புகைப்படம் எடுக்கப்பட்டு எக்ஸ் தளத்தில் பகிரப்பட்டு ஏராளமானவர்களின் கவனத்தை பெற்றது.
குறிப்பாக நீங்கள் இந்த காரின் உரிமையாளர் கிடையாது, இந்த காரை ஓட்டுபவர் தான் இந்த காரின் உரிமையாளர் மேலும் பணிவான முறையில் பேசுங்கள், கார் கதவுகளை கவனமாக கையாளுங்கள் என அச்சிடப்பட்டிருந்தது.
உங்களுடைய attitudeஐ உங்களுடைய பாக்கெட்டிலேயே வைத்து கொள்ளுங்கள், எங்களிடம் காட்டாதீர்கள் நீங்கள் எங்களுக்கு கூடுதலான தொகையை செலுத்தவில்லை, நீங்கள் தாமதமாக வந்துவிட்டு எங்களை வேகமாக செல்லும்படி கூற வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications