1970 களில் எலக்ட்ரானிக் சிட்டி நிறுவப்பட்டது மூலம் பெங்களூரின் ஐடி தலைநகராக உயரும் பயணம் துவங்கி பெங்களூர் நாட்டின் ஐடி தலைநகரமாக உயர்ந்து தற்போது கர்நாடகாவில் மட்டும் சுமார் 5,500 க்கும் மேற்பட்ட IT/ITES நிறுவனங்களைக் கொண்டுள்ளது.
தற்போதைய எலக்ட்ரானிக் சிட்டி 1970 - 80களில் Keonics Electronic City என்று அழைக்கப்பட்டது. 1978ல் கர்நாடக அரசு இப்புகுதி நிலத்தை வாங்கி கியோனிக்ஸ் எலக்ட்ரானிக் சிட்டி ஆக உருவாக்கியது. 1980 வரையில் இப்பகுதியில் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தான் அதிகமாக இருந்தது. Karnataka State Electronics Development Corporation என்பதன் சுருக்கமே Keonics.

1990களில் தாராளமயமாக்கல் கொள்கை-க்கு பின்பு Keonics Electronic City, எலக்ட்ரானிக் சிட்டி ஆக மாறிய இன்போடிஸ் முதல் சீமென்ஸ் வரையில் பல டெக் நிறுவனங்கள் வந்தது மூலம் Electronic City பகுதி ஒரு ஐடி ஹப் ஆக மாறியது.
பெங்களூர் போலவே ஹைதராபாத்-ம் ஐடி துறை வளர்ச்சியில் நீண்ட நெடிய கதை இருந்தாலும். கடந்த சில வருடத்தில் ஹைதராபாத் நகரம் பெங்களூர்-க்கு சொந்தமான நாட்டின் தகவல் தொழில்நுட்ப தலைநகரம் என்ற அந்தஸ்த்துக்கு சவாலாக மாறியுள்ளது.
உதாரணமாக 2022-23 நிதியாண்டில், தெலுங்கானா தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியில் 31.44 சதவீத வளர்ச்சியையும், தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்பு உருவாக்குவதில் 16.29 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது.
மேலும் கடந்த ஆண்டு, இந்தியாவில் உருவாக்கப்பட்ட 4,50,000 ஐடி வேலைவாய்ப்புகளில் மூன்றில் ஒரு பங்கிற்கு ஹைதராபாத் பங்களிக்கிறது. இது பெங்களூரில் உருவாக்கப்பட்ட 1.46 லட்சம் வேலைவாய்ப்புகளை காட்டிலும் அதிகம் என்று நாஸ்காம் அறிக்கை கூறுகிறது.

இது எப்படி சாத்தியமானது..? : தெலுங்கானா முதல்வர் கே சந்திரசேகர் ராவ் தலைமையில் அம்மாநில தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் வணிக நட்புச் சூழலை உருவாக்க பல செயல்திட்டங்களையும் சட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது.
அமைச்சர் KT ராமராவ் : இதோடு தெலுங்கானா மாநிலத்தின் ஐடி துறை அமைச்சர் KT ராமராவ் 2016ல் அறிமுகம் செய்யப்பட்ட தெலுங்கானா தகவல் தொழில்நுட்பக் கொள்கை மூலம் ஐடி மற்றும் டெக் நிறுவனங்களுக்கு பல சலுகைகள் அளிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக உள்கட்டமைப்பு ஆதரவு மற்றும் முதலீட்டு வாய்ப்புகளுடன், வரிக் குறைப்பு போன்ற பலவிதமான சலுகைகளை நிறுவனங்களுக்கு வழங்குகிறது.
கூகுள் நிறுவனம்: இதனால் பல முன்னணி உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களை தெலுங்கானா அரசு ஈர்த்துள்ளது, இதற்கு முக்கியமான உதாரணம் சமீபத்தில் கூகுள் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய அலுவலகத்தை பெங்களூர், டெல்லி, நொய்டா ஆகிய நகரங்களில் அமைக்காமல் ஹைதராபாத்தில் அமைத்தது தான்.
GCC நிறுவனங்கள் வருகை: 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் ஹைதராபாத் நகரத்தில் 11 புதிய GCC அலுவலகங்கள் நிறுவப்பட்டு உள்ளது. இக்காலக்கட்டத்தில் BlackBerry, CyberArk, Storable, and Align Technology போன்ற நிறுவனங்கள் ஹைதராபாத்தில் GCCகளை நிறுவின.

பெங்களூர்: இதேகாலக்கட்டத்தில் ஹைதராபாத் போலவே பெங்களூரிலும் 11 ஜிசிசி அலுவலகங்களும், புனே-வில் 5ம், மும்பையில் 4 ஜிசிசி திறக்கப்பட்டது, ஆனால் ஹைதராபாத் ஐடி துறையில் வெளிநாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் தான் துவங்கியது.
பன்னாட்டு நிறுவனங்கள்: ஹைதராபாத்தில் கடந்த 9 ஆண்டில் Apple, Meta, Qualcomm, Micron, Novartis, Medtronic, Uber, Salesforce மற்றும் பல வெளிநாட்டு நிறுவனங்களின் இரண்டாவது பெரிய அலுவலகங்கள் ஹைதராபாத்தில் அமைக்கப்பட்டுள்ளன என்று தெலுங்கானா ஐடி துறை அமைச்சர் KTR எனப்படும் கே.டி. ராமாராவ் தனது டிவிட்டரில் தெரிவித்தார்.
MAANG நிறுவனங்கள்: இதோடு அமேசான், மைக்ரோசாப்ட் ஆகிய அலுவலகங்களும் இருக்கும் வேளையில் தற்போது கூகுள்-ம் இப்பட்டியலில் இணைந்துள்ளது. சொல்லப்போனால் MAANG நிறுவனங்களின் அலுவலகங்கள் அனைத்தும் ஹைதராபாத்-ல் இருக்கிறது. இதற்கு ஏற்றார் போல் IIITH, IITH, BITS போன்ற பல பிரபலமான கல்லூரிகள் உள்ளது.

பார்மூலா: தமிழ்நாடு 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்ட வேண்டும் என்ற முக்கிய இலக்கில் இருக்கும் வேளையில் ஐடித்துறைக்கான பாதையில் பின்டெக் பாலிசி போன்ற பல புதுமைகள் மூலம் அரசு சரியான பாதையில் சென்றாலும் வேகமாக வளர பெங்களூர் பார்மூலா-வை விடவும் ஹைதராபாத் பார்மூலா ஏற்றதாக இருக்கும்.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்: வெளிநாட்டு நிறுவனங்களை குறிவைத்து ஈர்க்கும் திட்டத்தை ஏற்கனவே தமிழ்நாடு ஐடி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செயல்படுத்த துவங்கியுள்ளார். இதன் அடிப்படையில் தான் மாதம் 20000 முதல் 25000 ஐடி வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டில் உருவாக்க வேண்டும் என்ற இலக்கை நிர்ணயம் செய்துள்ளார்.
More From GoodReturns

படாத பாடு படுத்தும் ஏஐ!! 30,000 பேரை பணிநீக்கம் செய்ய தயாராகும் டெக் நிறுவனம்!!

போயஸ்கார்டனே இனி நம்ம ஏரியா தான்!! லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் பக்கா பிளான்!!

LPG வடிவில் வந்த முதல் ஷாக்.. அடுத்து பெட்ரோல் - டீசல்.. விலை உயர்வுக்கு உண்மையான காரணம் என்ன..?

தமிழ்நாட்டில் LPG சிலிண்டர் விலை ஏன் அதிகம்? மும்பை, டெல்லியை விட ரூ.15–ரூ.25 அதிகம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications