ஹைதராபாத்தை சேர்ந்த ஒரு மாணவரின் முயற்சியால் பிளாஸ்டிக் பை மாசுபடுதல் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. 2022இல் தொடங்கப்பட்ட பயோரிபார்ம் என்ற பயோடெக்னாலஜி நிறுவனம் இந்த சாதனையைப் புரிந்துள்ளது. பயோடிகிரேடபிள் மற்றும் காம்போஸ்டிபிள் பொருட்கள் மூலம் ஒருமுறை பயன்பாடு பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் பேக்குகளுக்கு ஒரு மாற்று வந்துள்ளது.
நாட்டின் முதல் அட்வென்சர் பார்க் நிறுவனம் பயோரிபார்ம், 60 லட்சம் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மாற்று வழியை கண்டுபிடித்துள்ளது.
இயற்கைக்கு உகந்த இந்த தயாரிப்பு பிளாஸ்டிக்கின் மூலம் சுற்றுசூழல் அபாயத்தை ஒழிக்கிறது.

முகமது அஸார் மொய்தீன் என்ற 24 வயது மாணவர் தனது தொழில் பயணத்தை 14 வயதில் தொடங்கினார். இன்சூரன்ஸ் பாலிஸிகளை விற்கத் தொடங்கினார். போகப் போக அவர் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டார். லோகோ டிசைன், வெப்சைட் டெவலப்மென்ட், கிளீனிங் சர்வீஸ்கள் போன்ற தொழில்களை செய்தார்.
குடும்பத்துக்காக பணம் சம்பாதிக்கவும் சுயமாக தொழில் செய்யவும் நினைத்து வீடுகள் மற்றும் அபார்ட்மென்ட்களில் கிளீனிங் வேலைகளை செய்தேன் என்று முகமது அசார் மொய்தீன் கூறுகிறார். அவரது 20 வயதில் கொரோனா கொள்ளை நோய் பரவிய நேரத்தில் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்பட்டது.
2019இல் பிரதமர் உரையில் ஒருமுறை பயன்பாடு பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டும் என்றபோது அவருக்கு பெரியதொரு தாக்கம் ஏற்பட்டது. பிளாஸ்டிக் ஒழிப்பில் பேப்பர் பேக், சணல் பேக் ஆகியவற்றுக்கு குறுகிய வாய்ப்புதான் உள்ளது. சணல் பேக் தயாரிப்பதற்கு செலவு அதிகமாகும். இந்த நிலையில் பேப்பர் பேக்கால் மட்டும் இதை சாதிக்க முடியாது. பிளாஸ்டிக்கின் குறைந்த எடை, நீடித்த ஆயுள், தண்ணீரால் பாதிக்காது போன்ற அம்சங்கள்தான் அதற்கு சாதகமாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.
அதே அம்சங்கள் கொண்ட ஆனால் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருளை தயாரிக்க நினைத்தேன் என்றார் முகமது அஸார் மொய்தீன். அவரது இந்த நோக்கம் பயோபாலிமர்களை வைத்து பயோடெக்னாலஜி மூலம் புரட்சிகரமான தயாரிப்பை உருவாக்க வைத்தது. இதுதான் பயோரிபார்மின் வித்து.
பியோரிபார்மின் சுற்றுச்சூழலுக்கு உகந்த இகோ பேக்குகள் பிளாஸ்டிக்குக்கு அவ்வளவு எளிதான மாற்றாக அப்போதில்லை. ஆனால் பிளாஸ்டிக்கை விட இலகுவான அமைப்பை இந்த பேக்குகள் கொண்டிருந்தன. பேப்பர் போல் அல்லாமல் பயோரிபார்ம் பேக்குகள் நீடித்த ஆயுளுடனும் கிழியாத தன்மையும் கொண்டிருந்தன. மண்ணில் உள்ள பாக்டீரியா மூலம் இந்த பேக்குகள் மக்கும் தன்மை கொண்டது. இதனால் பயோரிபார்ம் பேக்குகளுக்கு உள்ளூர் மற்றும் மத்திய அரசுகளின் சுற்றுச்சூழல் அமைப்புகள் அனுமதி எளிதாகக் கிடைத்தது.
தயாரிப்புச் செலவு ஒரு முட்டுக்கட்டையாக இருந்தாலும் பயோரிபார்ம் இந்த பேக்குகளை மலிவான விலையில் தயாரிக்க வழி வகுத்தது. பிளாஸ்டிக் ஒரு கிலோ விலை ரூ.130க்கு விற்றபோது பயோரிபார்ம் பேக்குகள் விலை கிலோ ரூ.190க்கு விற்கப்பட்டது. அதேநேரத்தில் ஒரு கிலோவுக்கு அதிக அளவு பேக்குகள் தயாரிக்கப்பட்டன. மீடியம் சைஸ் பேக் தயாரிக்க ரூ 0.80 செலவானது. இதே அளவு பிளாஸ்டிக் பேக் தயாரிப்பு செலவு ரூ.41 மட்டுமே.
ஆனால் பயோரிபார்ம் பேக்குகள் 40 முதல் 50 சதவீத சாதகத்தை கொண்டிருந்தது. பிளாஸ்டிக், பேப்பர் பேக்குகளைக் காட்டிலும் சுற்றுச்சூழலுக்கு உகந்தது.
அட்வென்சர் பார்க் இன்குபேட்டர் திட்டம் ரூ.1 கோடி செலவில் அமைக்கப்பட்டது. ஹைதராபாத்தில் இதற்கான ஆலையை அமைத்து பயோடிகிரேடபிள் பாலிமர் பேக்குகளை முகமது அஸார் மொய்தீன் தயாரித்தார். ஆரம்பம் முதலே அவரது தயாரிப்புக்கு மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு இருந்தது.
இருந்தாலும் ஆரம்பகால கட்டம் சற்று சிரமமாகவே இருந்தது.
ஆனால் 8 நகரங்களுக்கு பயோரிபார்ம் பேக் விற்பனை விரிவடைந்தது.
முதல் ஆண்டான 2022-23இல் ஆண்டு வருமானமாக ரூ.16 லட்சம் கிடைத்தது. அடுத்த ஆண்டில் வருமானம் ரூ.1.3 கோடி ஆனது.
2024-25 நிதியாண்டில் வருவாயை 3 முதல் ரூ.3.5 கோடியை எட்டுவதற்கு திட்டமிட்டுள்ளோம் என்று முகமது அஸார் மொய்தீன் தெரிவித்தார்.
அவரது நிறுவனத்தில் இப்போது 11 பேர் வேலை பார்க்கின்றனர். 2500 சதுர அடி பரப்பில் இயங்கும் அவரது பேக்டரியில் தொழில் சிறப்பாக நடைபெறுகிறது. ஹோட்டல்கள் போன்ற வாடிக்கையாளர்கள் பயோரிபார்மின் பேக்குகளை வாங்குகின்றனர்.
சீடு பண்டிங் மூலம் ரூ.6 லட்சத்தை முகமது அஸார் திரட்டினார். அத்துடன் அடல் இன்குபேஷன் சென்டரின் நிதியுதவியும் சேர்ந்தது. தனது நிறுவனத்தின் மூலம் இந்தியாவை சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான தலைவராக மாற்ற முடியும் என அஸார் நம்புகிறார். பயோரிபார்ம் ஒரு தொழில் மட்டுமல்ல, இந்த கிரகத்தை ஆரோக்கியமாக்கும் ஒரு இயக்கமாகும்.
Story written by: Jayachandran
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications