அதிகாலை 3 மணிக்கு கதவை தட்டிய ஸ்விக்கி ஊழியர்.. டிவிட்டரில் செம டிரெண்டிங்..!

புதிய நகரம் எப்போதும் ஒரு பயம் கலந்த அனுபவத்தை தான் கொடுக்கும், இதற்கு நம்முடைய சொந்த அனுபவம் கூட நிறைய இருக்கும். ஆனால் வெகு சிலருக்கு மட்டுமே மனம் நெகிழும் அனுபவம் கிடைக்கும், இந்த ஒரு நொடி தான் மனிதநேயத்தின் மீதான எனது நம்பிக்கையை அதிகரிக்கும்.

இப்படி தமால் ஷா தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத்-க்கு சென்ற போது தனக்கு நடந்த மனம் நெகிழும் அனுபவத்தை டிவிட்டரில் பகிர்ந்தார். இந்த பதிவு தற்போது 1 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது. அப்படி என்ன பதிவு.. தமால் ஷா பதிவை அப்படியே படியுங்கள்.

அதிகாலை 3 மணிக்கு கதவை தட்டிய ஸ்விக்கி ஊழியர்.. டிவிட்டரில் செம டிரெண்டிங்..!

நீண்ட நேர பணிக்கு பிறகு மிகவும் தாமதமாக விடுதிக்கு வந்தேன். அருகில் இருந்த அனைத்து உணவகங்களும் மூடப்பட்டிருந்ததால் வேறு வழி இல்லாமல் உணவை ஸ்விக்கியில் ஆர்டர் செய்தேன். எனக்கு ஹைதராபாத் பற்றி அதிகம் தெரியாது, ஊருக்கு புதியது என்பதால் ஸ்விக்கி மேப்பில் நான் தங்கியிருக்கும் இடத்தை தவறாக பின் செய்துவிட்டேன் என தமால் ஷா தனது பதிவை துவங்கினார்.

பொதுவாக இதுப்போன்ற நேரத்தில் பெரும்பாலானோர் ஆர்டரை கேன்சல் செய்ய சொல்லிவிடுவார்கள். ஆனால் இந்த ஸ்விக்கி டெவிவரி ஊழியர் அப்படி செய்யவில்லை என தமால ஷா தெரிவித்துள்ளார். ஸ்விக்கி ஊழியர் என்ன செய்தார்..?

தமால் ஷா தனது பதிவில், "சரியான இடத்தை குறிக்காதது என்னுடைய தவறாக இருப்பினும், ஸ்விக்கி டெலிவரி ஏஜென்ட் இரவில் சுமார் 12 கிமீ தூரம் வாகனத்தை ஓட்டி வந்து என்னுடைய இடத்தை கண்டுபிடித்து உணவை டெலிவரி செய்தார். நான் உணவை வாங்கிய போது அதிகாலை 3 மணி" என நெகிழ்ச்சியுடன் தமால் ஷா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பதிவில், "இதற்கு மத்தியில் தவறான இடத்தை குறித்ததை அறிந்து ஸ்விக்கி ஊழியரிடம் போனில் பேசிய போது, 'அண்ணா நான் காலையில் இருந்து எதுவும் சாப்பிடவில்லை' என கூறினேன், உடனே என்னுடைய இடத்திற்கே வருவதாக கூறினார். 3 மணிக்கு உணவை டெலிவரி செய்துவிட்டு ஒருவரை பசியுடன் வைத்திருப்பது மனிதாபிமானம் இல்லை, அதனால் தான் வந்தேன்" என்று கூறினார். இந்த டெலிவரி ஊழியர் பெயர் முகமது ஆசம் என்பதையும் தமால் ஷா தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

நல்ல மனிதர்கள் நம்மை சுற்றி இருக்கிறார்கள், மனிதநேயத்தின் மீதான எனது நம்பிக்கையை அவர் மீண்டும் நிலைநாட்டினார். அவர் புகைப்படம் எடுக்க கூச்சப்பட்டார் ஆனால் அவர் என் இதயத்தை வென்றார். இது எனது தெலுங்கானா பயணத்தின் சிறந்த நினைவாக இருக்கும் என்றார் தமால் ஷா.

டெலிவரி செய்துவிட்டு போகும் போது அசாம் சிரித்துக்கொண்டே 'குட்நைட்’ என்றார். உடனே நான் எப்போது உங்க வேலையை முடிப்பீர்கள் என கேட்டேன், இப்போ வீட்டுக்கு போறேன் சாப்பிட்டுவிட்டு தூங்கிவிடுவேன் என்றார். நான் எங்களுடைன் உணவைப் பகிர்ந்து கொள்ள அழைத்தேன், ஆனால் அவர் மறுத்துவிட்டார், நீங்கள் கடவுளை வணங்கும்போது என்னை நினைத்துக்கொள்ளுங்கள் போதும் என்றார். இப்படி இந்த பதிவு முடிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+