இந்தியாவின் முக்கிய ஐடி நகரங்களில் ஒன்றான ஹைதராபாத் நகரம் இந்த கோடையில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. இதனால் ஹைதராபாத் முழுவதும் தனியார் தண்ணீர் டேங்கர்களின் தேவை பெரிய அளவில் உயர்ந்துள்ளது.
ஹைதராபாத் பெருநகர நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் (HMWS&SB) ஏற்கனவே 10,000 டேங்கர்களை இயக்கினாலும், கொண்டாபூர், மாதாபூர், கச்சிபவுலி போன்ற மேற்கு மற்றும் மையப் பகுதிகளில் தனியார் டேங்கர்களை மட்டுமே நம்பியிருக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்த நெருக்கடி காரணமாக, இப்பகுதியில் வசிக்கும் மக்கள் வாரத்திற்கு ஆயிரக்கணக்கான ரூபாய்களை தண்ணீருக்காக மட்டுமே செலவிட வேண்டிய கட்டாயம் உருவாக்கியுள்ளது.

ஹைதராபாத் நகரத்தில் இந்த கோடை காலத்தில் எப்போதும் இல்லாத தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. தனியார் டேங்கர் ஆபரேட்டர்கள் தினசரி 5 முதல் 6 டேங்கர்களை விநியோகிக்கின்றனர், கோண்டாபூர், மாதாபூர், கச்சிபவுலி போன்ற பகுதிகளில் தண்ணீர் டேக்கர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.
தனியார் தண்ணீர் டேங்கர்கள் விலை கடந்த ஆண்டை காட்டிலும் அதிகளவில் உயர்ந்துள்ளது, ஒரு 25,000 லிட்டர் டேங்கரின் விலை ரூ.3,500 முதல் ரூ.4,000 வரை உள்ளது, அதே சமயம் 10,000 லிட்டர் டேங்கர் ரூ.1,500 முதல் ரூ.2,000 வரையிலான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த விலை உயர்வு கொண்டாபூர், மாதாபூர், கச்சிபவுலி போன்ற முக்கிய பகுதிகளில் வசிக்கும் மக்களை அதிகம் பாதிக்கிறது. கோண்டாபூரில் உள்ள ஒரு கேட்டட் கம்யூனிட்டியை சேர்ந்த ரவி ஷங்கர் டைம்ஸ் பத்திரிக்கையிடம் பேசுகையில் "கடந்த ஆண்டு நாங்கள் எந்த டேங்கர் தண்ணீரையும் வாங்கவில்லை, ஆனால் இந்த ஆண்டு தண்ணீரை வாங்கி தான் பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. பொதுவாக 7-8 மணி நேரம் கிடைக்கும் தண்ணீர் இப்போது 3-4 மணி நேரம் மட்டுமே கிடைக்கிறது," என்று கூறினார்.
நகரின் பல பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் வறண்டு போயுள்ளன, இது தண்ணீர் பிரச்சனையை மேலும் தீவிரப்படுத்துகிறது. ரவி ஷங்கர் கூறுகையில், "முன்பு 600 மீட்டர் ஆழத்தில் தண்ணீர் கிடைத்தது. ஆனால் இப்போது 1,200 மீட்டர் ஆழம் தோண்டியும் தண்ணீர் கிடைப்பதில்லை." இதனால், அப்பார்ட்மென்ட் குடியிருப்புகள் தனியார் டேங்கர்களை முழுமையாக நம்பியுள்ளன. ஒவ்வொரு குடும்பமும் வாரத்திற்கு ரூ.2,500 செலவு செய்த தண்ணீர் வாங்க வேண்டியுள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் இது ரூ.3,000 ஆக உயரலாம் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
இந்த தண்ணீர் பற்றாக்குறை, ஹைதராபாத் குடியிருப்பாளர்களின் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதிக்கிறது. குறிப்பாக, மேற்கு மற்றும் மையப் பகுதிகளில் உள்ள உயர்ரக குடியிருப்பு பகுதிகள் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் மே 2025 இல் கோடை வெப்பம் உச்சத்தில் இருக்கும் எனவும், பல நகரங்கள் அதிக வெப்பநிலையை மோசமாக எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வெப்ப அலை நிலவுகிறது. இந்தியாவில் அதிக வெப்ப நிலையை எதிர்கொள்ளும் நகரங்கள் பட்டியலில் அகமதாபாத், ராஜ்கோட், நாக்பூர், சென்னை, ஜோத்பூர், புவனேஷ்வர், ஹைதராபாத், ஆகியவை உள்ளது.
தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம், அல்லது கத்திரி வெயில், 2025 ஆம் ஆண்டு மே 4 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி வரை 25 நாட்கள் நீடிக்கும். இந்த காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் இயல்பை விட அதிகமாக இருக்கும், குறிப்பாக மே 12 முதல் மே 18 வரையிலான 7 நாட்களில் உச்ச வெப்பம் பதிவாகலாம்.
வேலூர், ஈரோடு, கரூர், தஞ்சாவூர், சேலம், மதுரை, திருத்தணி, கோவை, திருப்பத்தூர் போன்ற இடங்களில் 100°F (38°C) முதல் 104°F (40°C) வரை வெப்பநிலை இருக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளது. 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலே தமிழ்நாட்டில் வெயில் கடுமையாக உள்ளது. ஈரோட்டில் 109°F (43°C) வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது.
2025 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் இந்தியாவில் தண்ணீர் தட்டுப்பாடு கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, NITI ஆயோக், உலக வங்கி, மற்றும் உலக பொருளாதார மன்றம் (WEF) ஆகியவற்றின் அறிக்கைகளின் அடிப்படையில், ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு அதிகமாக இருக்கும் என தெரிகிறது. இதுவே நகரங்கள் அடிப்படையில் பார்த்தால் சென்னை, பெங்களூரு, டெல்லி, என்சிஆர், ஹைதராபாத் ஆகிய மெட்ரோ நகரங்களில் மோசமான பாதிப்பு இருக்கும் என தெரிகிறது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications