ஹைதராபாத்தில் ஒரு சிறிய கிராமத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய நண்பருடன் இணைந்து DeleMate என்ற செயலியை உருவாக்கியுள்ளார். இது பயணிகள் மூலம் பார்சல்களை டெலிவரி செய்யும் செயலி ஆகும். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இது எப்படி செயல்படுகிறது..? எவ்வளவு வருமானம் கிடைக்கும்..? என்பது பற்றி தெளிவாக பார்க்கலாம்.
DeleMate என்ற செயலியை உருவாக்கி, பயணிகள் மூலம் பார்சலை டெலிவரி செய்யும் புதிய தொழிலை தொடங்கியிருப்பவர் தான் தாரக் ராம். இவருக்கு வயது 22. இவர் ஒரு புதுமையான தொழிலை செய்ய விரும்பியுள்ளார். இதுதொடர்பாக தனது நண்பருடனும் கலந்துரையாடியுள்ளார். அப்போது இவர்களுக்கு ஒரு யோசனை வந்துள்ளது. அப்போது தான், இந்த புதிய செயலியை உருவாக்கியுள்ளனர்.

எப்படி செயல்படுகிறது..?: நீங்கள் யாருக்கேனும் ஒரு பார்சல் அனுப்ப வேண்டும் என்றால், அதன் முகவரி மற்றும் பார்சல் குறித்த விவரங்களை DeleMate செயலியில் பதிவு செய்ய வேண்டும். பின்னர், அந்த வழியாக பயணம் செய்யும் பயணிகள், உங்கள் பார்சலை நீங்கள் அனுப்ப விரும்பும் முகவரிக்கு எடுத்துச் செல்ல விருப்பம் தெரிவிப்பார். பின்னர், அந்த பார்சலை வாங்கிக் கொண்டு அந்த பயணி, சம்பந்தப்பட்டவர்களிடம் பாதுகாப்பாக கொண்டு சென்று ஒப்படைப்பார். இதற்கான பணம் செலுத்தும் முறை, செயலியின் மூலமே நடைபெறும். மேலும், பார்சல் அனுப்பும் நபரும், பயணியும் பார்சல் இப்போது எங்கே உள்ளது..? என்பதை நேரடியாக லைவ் டிராக்கிங் மூலம் கண்காணித்துக் கொள்ள முடியும். பார்சல் கிடைத்த பிறகு, இருவரும் ஒருவருக்கொருவர் ரேட்டிங் (rating) வழங்கிக் கொள்ள முடியும்.
DeleMate‑ன் நன்மைகள் : பார்சல்களை விரைவாகவும், சுலபமாகவும் அனுப்ப முடியும். வழக்கமான கூரியர் சேவையைவிட இது குறைந்த செலவு தான். அதேசமயம், பயணிகளுக்கும் கூடுதல் வருமான வாய்ப்பு கிடைக்கிறது. பயணிகள் தங்கள் பயணித்தின்போதோ அல்லது மற்ற நேரங்களிலோ பார்சல்களை எடுத்துச் செல்லலாம். பார்சலின் அளவு, தூரம் மற்றும் அவசர நிலை போன்ற காரணங்களால் வருமானம் மாறும். DeleMate செயலி உங்கள் பயணத்தின்போது, கூடுதல் பணம் சம்பாதிக்க உதவுகிறது. பல பார்சல்கள் எடுத்துச் செல்வதன் மூலம் நல்ல வருமானம் பெற முடியும்.
KYC சான்றிதழ் கட்டாயம் : DeleMate செயலி, பயனர்களின் பாதுகாப்பும் நம்பகத்தன்மையும் முதன்மையாகக் கருதுவதால், அனைத்து பயனர்களுக்கும் KYC சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது, நம்பிக்கையை ஏற்படுத்த ரேட்டிங் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான சம்பளமும் செயலி மூலம் பாதுகாப்பாக பரிமாற்றம் செய்யப்படுகிறது.
என்னென்ன பார்சல்களை அனுப்பலாம்..?: DeleMate செயலி மூலம் சிறிய ஆவணங்கள் முதல் பெரிய பெட்டிகள் வரை பலவிதமான பொருட்களை அனுப்ப முடியும். ஆனால், தடை செய்யப்பட்ட சட்டவிரோத பொருட்கள் மற்றும் ஆபத்தான பொருட்களை பார்சலாக அனுப்ப முடியாது.
DeleMate செயலியை பயன்படுத்துவது எப்படி..?: முதலில், கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பில் ஸ்டோர் மூலம் DeleMate செயலியை பதவிறக்கம் செய்ய வேண்டும். பிறகு, உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்ற விவரங்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். பின்னர், உங்கள் சுயவிவரத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இதனைத் தொடர்ந்து, பார்சல் அனுப்ப விரும்புவோர் புதிய டெலிவரி கோரிக்கையை பதிவு செய்யலாம். பயணிகள் தங்களுக்கான பாதையில் உள்ள கோரிக்கைகளை தேடி ஏற்றுக் கொள்ளலாம். தற்போது இந்த சேவை ஹைதராபாத் நகரில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. விரைவில் மற்ற நகரங்களிலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications