ஒரு நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டுமெனில் வேகமான, மலிவான மற்றும் பல தரப்பு போக்குவரத்து அவசியம். இதுதான் அடிப்படை, இதற்காகவே இந்தியாவில் பல போக்குவரத்துத் திட்டங்கள், மேம்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இதனால் போக்குவரத்துச் செலவுகள் குறைவது மட்டும் அல்லாமல் மக்களின் இயக்கமும் வேகமாக இருக்கும், இதனால் வர்த்தகம், முதலீடுகள், வேலைவாய்ப்பு என அனைத்தும் வளர்ச்சி அடையும். இந்தப் பார்மூலா ஆதிகாலத்தில் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தில் இருந்து இருக்கிறது.

இப்படி, உலகையைத் தனது வேகமான போக்குவரத்து முறை மூலம் வியக்கவைத்தது Hyperloop One நிறுவனம். டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் ஒரு மேதை என்பது எல்லோருக்கும் தெரியும், இவர் 2013ல் Hyperloop என்ற வேகமான போக்குவரத்து முறையைக் குறித்த ஆய்வறிக்கையைச் சமர்ப்பித்தார். இதன் அடிப்படையில் தான் Hyperloop One நிறுவனம் உருவாக்கப்பட்டது.
Hyperloop One நிறுவனம் மூடப்படுவதற்கு முன்பு, Hyperloop என்றால் என்ன எனத் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். இந்தப் போக்குவரத்து முறை ஒரு டியூப் வாயிலாக நடக்கும் உதாரணமாகக் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் மெட்ரோ பாலம் போல் ஒரு டியூப் அமைத்து அதில் ஒரு கேப்சியூல் போன்ற வாகனத்தில் அமர்ந்துகொண்டால் LOW PRESSURE வாயிலாக இந்தக் கேப்சியூல் வேகமாகச் செல்லும்.
எந்த அளவுக்கு வேகமாகச் செல்ல முடியும் என்றால்.. ஜூலை 2019ல் செய்த சோதனையில் இந்தக் கேப்சியூல் டியூப் வாயிலாக 463 km/h வேகத்தில் செல்லக் கூடியது எனக் கண்டுபிடிக்கப்பட்டது. அப்படியானால் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான 3676 கிலோமீட்டர் தூரத்தை வெறும் 8 மணிநேரத்தில் கடந்துவிடலாம். கேட்கும்போதே பிரம்மிப்பாக இருக்குதுல்ல.
இந்த வேகமான போக்குவரத்து முறையைப் பலருக்கும் வியப்பை கொடுத்த நிலையில், பல நிறுவனங்கள் இத்துறையில் இறங்கியது. 2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம் ஹைப்பர்லூப் அமைக்கப் பல நாடுகள் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தாலும், இதுவரையில் எந்தொரு நாடும் கட்டுமானத்தைத் துவங்கவில்லை.
ஏன் இந்தியாவில் மகாராஷ்டிர அரசு மும்பை டூ புனே மத்தியில் ஹைப்பர்லூப் அமைப்பு Hyperloop One நிறுவனத்துடன் விருப்பம் தெரிவித்து 2018ல் ஒப்பந்தம் செய்தது. ஆனால் இதுவரையில் எந்த ஒப்பந்தமும் பெறவில்லை.
இதனால் Hyperloop One நிறுவனத்தை மூடவும், இதன் சொத்துக்களை விற்கவும், டிசம்பர் 31 ஆம் தேதி உடன் இதன் ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கவும் திட்டமிட்டு உள்ளது. 2020ல் முதல் முறையாக Hyperloop One நிறுவனத்தின் கேப்சியூல் வாயிலாக 171 கிலோமீட்டர் வேகத்தில் மனிதன் சோதனையும் நடந்தது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications