ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் டிசம்பர் மாதத்தில் வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிரடியாக விலை தள்ளுபடிகளை அறிவிக்கும்.
குளிர்காலத்தில் ஏசி மெஷின், பிரிட்ஜ்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் இதுபோல விலைத் தள்ளுபடி சலுகைகளை அறிவிப்பார்கள். கேட்டால் ஆஃப் சீசன் சலுகை என்பார்கள்.
அதுபோல இந்தாண்டு ஹூண்டாய் மிகப் பெரிய சலுகையை அறிவித்துள்ளது. ஹூண்டாய் கார்களுக்கு ரூ.3 லட்சம் வரை விலையில் தள்ளுபடி அளிக்கப்படுகிறது. கார் விரும்பிகள் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை சப்வென்ஷன் என்பார்கள்.

ஹூண்டாய் தற்போது வெளியிட்ட அறிவிப்பின்படி ரொக்கத் தள்ளுபடி, எக்ஸ்சேஞ்சு போனஸ்கள், கார்ப்பொரேட் போனஸ்கள் என அனைத்தையும் சேர்த்து அதிகப்படியாக 3 லட்சம் வரையில் தள்ளுபடி வழங்குகிரது.
இந்த சலுகைகள் Grand i10 Nios, Aura, i20, Verna, Alcazar, Tucson, Kona Electric ஆகிய கார்களுக்கு வழங்கப்படுகிறது. ஹூண்டாய் கார்களுக்கு அளிக்கப்படும் விலைத்தள்ளுபடி விவரம்:
Hyundai Grand i10 Nios - 48,000 ரூபாய்
Hyundai Aura - 33,000 ரூபாய்
Hyundai i20 - 20,000 ரூபாய்
Hyundai Verna - 45,000 ரூபாய்
Hyundai Alcazar - 35,000 ரூபாய்
Hyundai Tucson - 1.50 லட்சம் ரூபாய்
Hyundai Kona Electric - 3 லட்சம் ரூபாய்
இந்தச் சலுகை பிரபல மாடல்களான Exter, Venue, Creta ஆகியவற்றுக்குக் கிடையாது. 2023 காலண்டர் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு 6 லட்சம் கார்களை உள்ளூர் சந்தையில் விற்பதற்கு ஹூண்டாய் இலக்கு வைத்துள்ளது.
ஜனவரி முதல் நவம்பர் வரை ஹூண்டாய் நிறுவனம் 5,59,361 கார்களை விற்றுள்ளது. கடந்த 2022இல் 5,52,511 கார்களை விற்றதுதான் இதுவரையான சாதனையாக இருந்தது. ஹூண்டாயின் அடுத்த பெரிய அறிமுகம் என்றால் Creta ஃபேஸ்லிப்ட் ஆகும். அந்தக் கார் 2024 ஜனவரி 16 ஆம் தேதி வெளியாகிறது.


Click it and Unblock the Notifications