ஹூண்டாய் நிறுவனத்தின் ஒவ்வொரு முடிவும் இனி ரொம்ப முக்கியம், ஐபிஓ வெளியிட திட்டமிட்டு இருக்கும் வேளையில் ஆட்டோமொபைல் துறை தலைகீழாக மாறி வரும் வேளையிலும் சென்னையை நம்பி மிகப்பெரிய முடிவை எடுத்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா (HMIL) மற்றும் கியா இந்தியா ஆகிய இரண்டு நிறுவனங்களின் ஒருங்கிணைந்த ஆண்டு உற்பத்தி திறனை 15 லட்சம் வாகனங்களாக உயர்த்த ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் மூலம், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தியில் பெரும் முதலீடு செய்வதை ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் உறுதி செய்துள்ளது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் முதல் எலக்ட்ரிக் SUV கார் உற்பத்தியை, சென்னை ஆலையில் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதேபோல் 2030 ஆம் ஆண்டுக்குள் ஐந்து எலக்ட்ரிக் வாகன மாடல்களை உற்பத்தி செய்யவுள்ளதாகவும் ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹூண்டாயின் கிளை நிறுவனமான கியா இந்தியா, 2025 ஆம் ஆண்டில் அதன் உள்ளூர் எலக்ட்ரிக் வாகன மாடலின் உற்பத்தியைத் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் செயல் தலைவர் ஈயூசன் சுங் அண்மையில் இந்தியாவுக்கு வந்த நிலையில் இந்த முக்கியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
கொரிய நிறுவனமான ஹூண்டாய் அதன் இந்திய கிளை நிறுவனத்தை இந்தியாவில் இந்த ஆண்டு பொது வெளியீட்டை (IPO) தொடங்க உள்ள நிலையில் ஈயூசன் சுங் இந்தியாவின் பயணம் முக்கியமானதாக மாறியுள்ளது.
தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, ஹூண்டாய் நிறுவனம் மே மாதம் செபி-யிடம் DRHP அறிக்கை தாக்கல் செய்து, 2024 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் ஐபிஓவை தொடங்க வாய்ப்புள்ளது.
இந்த ஐபிஓ மூலம் ஹூண்டாய் நிறுவனம் 30 பில்லியன் டாலர் மதிப்பில் 3 பில்லியன் டாலருக்கு மேல் நிதி திரட்ட ஹூண்டாய் மோட்டார் இந்தியா (HMIL) திட்டமிட்டுள்ளது. இந்த IPO இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய முதலீடாக இருக்கும் என தெரிகிறது.
இந்தியாவில் ஐபிஓ வெளியிடும் நேரத்தில் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன பிரிவை விரிவாக்குவதோடு மட்டுமல்லாமல், எலக்ட்ரிக் வாகன வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், சார்ஜிங் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் ஒரு எலக்ட்ரிக் வாகன எகோசிஸ்டம் உருவாக்கவும் ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
மேலும், எஸ்யூவி விற்பனையில் தனது தலைமை பதவியை வலுப்படுத்துவதற்கும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்திய சந்தையில் சுமார் 15 சதவீத பங்கைக் கொண்டிருக்கும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா (HMIL), பயணிகள் வாகனங்களின் இரண்டாவது மிகப்பெரிய ஏற்றுமதியாளராகவும் உள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட புனே தொழிற்சாலையில் இருந்து விரைவில் உற்பத்தி பணிகளைத் துவங்க உள்ளது. இத்தொழிற்சாலையில் இருந்து வருடத்திற்கு 2 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

மினி பாகிஸ்தான்? அடுத்தடுத்த சர்ச்சையில் TCS, டெக் மகேந்திரா! ஐடி நிறுவனங்களில் என்ன தான் நடக்கிறது?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

விஜய் -க்கு எம்.எல்.ஏ பதவியை தரப்போவது பெரம்பூரா? திருச்சி கிழக்கா? இது தான் கள நிலவரம்!!

ஸ்திரீ சக்தி SS 515 லாட்டரி: யாருக்கெல்லாம் அடித்தது ஜாக்பாட்!! முழு விவரம்



Click it and Unblock the Notifications