இந்தியாவில் கார் என்பது ஆடம்பரம் என்ற நிலையை கடந்து, தற்போது அத்தியாவசியமான ஒரு விஷயமாக மாறியுள்ளது. இதனால் வீட்டுக்கு ஒரு கார் என்ற நிலையை இந்தியாவில் கொண்டுவர அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தீவிரமாக பணியாற்றி வருகிறது. சாமானிய மக்களும் காரை வாங்கி சொந்தமாக்க வேண்டும் என்பதற்காக சிறிய வகை கார்களுக்கு சமீபத்தில் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டது. இதன் மூலம் கார் விலை குறைந்து நவம்பர், டிசம்பர் மாதத்தில் அதிகப்படியான கார்கள் விற்பனையானது. ஆனால் 2026ல் ஜிஎஸ்டி வரி குறைப்பை திரும்ப பெறும் வகையில் ஹூண்டாய் முதல் பல முன்னணி நிறுவனங்கள் கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், 2026 ஜனவரி 1 முதல் தனது அனைத்து கார் மாடல்களின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் விளக்கம் கொடுத்துள்ளது. உலகளாவில் உற்பத்தி செய்யப்படும் பொருள் விலைகள், குறிப்பாக உலோகங்கள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், கார் உற்பத்தி நிறுவனங்கள் பெரும் அழுத்தத்தை சந்தித்து வருகின்றன. இதனால் பல நிறுவனங்கள் தனது buffer அளவை கடந்து சென்றதால் விலை உயர்வை வாடிக்கையாளர் மீது வைத்துள்ளது.

விலை உயர்வின் அளவு
ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி, அனைத்து மாடல்களிலும் சராசரியாக 0.6 சதவீதம் விலை உயரும் என அறிவித்துள்ளது. இந்த உயர்வு உற்பத்தி செலவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பை ஈடுகட்டும் நோக்கில் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்தின் கார்கள் அனைத்து தரப்பு வாடிக்கையாளர்களையும் ஈர்க்க வேண்டும் என்பதற்காக என்டரி மாடலான ஹேட்ச்பேக் மாடல் கிராண்ட் ஐ10 விலை ரூ.5.47 லட்சம் முதல் தொடங்குகிறது, அதிகப்பட்சமான எலக்ட்ரிக் காரான அயோனிக் 5-ஐ ரூ.46.30 லட்சம் விலையில் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இந்த விலை உயர்வு முதன்முதலாக கார் வாங்குபவர்கள் மத்தியில் பெரும் சுமையாக மாறும்.
இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகளவில் கார் உற்பத்தி துறை பல சவால்களை சந்தித்து வருகிறது. ஒருப்பக்கம் சீனாவின் அதிரடி முதலீடுகள், மறுமுனையில் அமெரிக்காவில் வரி விதிப்பு ஆகியவை மொத்த ஆட்டோமொபைல் சப்ளை செயினை பாதித்துள்ளது. இதோடு மூலப்பொருட்கள் விலை உயர்வு, விநியோகச் சங்கிலியில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களில் முதலீடு ஆகியவை ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கார் உற்பத்தி செலவுகளை அதிகரித்து வருகின்றன.
ஹூண்டாய் போலவே ரெனால்ட் 2சதவீதம் வரை, நிசான் 3சதவீதம் வரை, மெர்சிடிஸ்-பென்ஸ் 2சதவீதம் வரை, பிஎம்டபிள்யூ 6சதவீதம் வரை, ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார்ஸ் 2 சதவீதம் வரை விலையை ஜனவரி 2026 முதல் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளன.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications