இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் நீண்ட காலமாக 2வது இடத்தில் இருந்து வரும் ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்த ஆண்டு யாரும் எதிர்பார்க்காத வகையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு, 2வது இடத்தை மஹிந்திரா கைப்பற்றியுள்ளது. இந்தியாவின் 3 ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இந்த வருடம் பெரிய அளவிலான வர்த்தகத்தை கைப்பற்றியுள்ளது.
2025ல் விட்ட இடத்தை மீண்டும் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஹூண்டாய் புதிதாக ஒரு துறையில் இறங்கியுள்ளது. ஆம் ஹூண்டாய் கமர்சியல் போக்குவரத்து பிரிவில் புதிதாக 2 கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது டாக்சி கார்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது, இதுநாள் வரையில் இத்துறையில் இல்லாமல் இருந்த ஹூண்டாய் இந்தியாவில் வேகமாக வளரும் டாக்சி சேவை துறையை கருத்தில் கொண்டு இப்பிரிவில் தனது வர்த்தகத்தை துவங்கியுள்ளது.

டிசம்பர் 30ஆம் தேதி ஹூண்டாய் நிறுவனம் வணிக போக்குவரத்து பிரிவில் நுழைவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது, பிரைம் HB (ஹேட்ச்பேக்) மற்றும் பிரைம் SD (செடான்) என்ற இரு புதிய மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை டாக்சி உரிமையாளர்கள் மற்றும் வாடகை வாகன நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
டாக்சி சேவைக்கு ஏற்ற வகையில் குறைந்த ஆப்ரேட்டிங் செலவு, நம்பகத்தன்மை மற்றும் அதிக வருமான வாய்ப்புகளை இலக்காக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக ஹூண்டாய் இந்தியா தரப்பில் தெரிவித்துள்ளது.
பிரைம் HB மற்றும் பிரைம் SD இரண்டும் 1.2 லிட்டர் கப்பா 4 சிலிண்டர் இன்ஜின் கொண்டவை. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருளில் இயங்கும் வரையில் இரு கார்களையும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பிரைம் HB காரின் ஆரம்ப விலை 5.99 லட்சம் ரூபாயும் பிரைம் SD ஆரம்ப விலை 6.89 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) விலை அறிமுகம் செய்துள்ளது. இந்த கார்களை ஹூண்டாய் டீலர்ஷிப்களில் 5,000 ரூபாய் முன்பணம் செலுத்தி புக்கிங் செய்யலாம் எனவும் அறிவித்துள்ளது ஹூண்டாய் நிறுவனம்.
இந்த இரு கார்களும் அதீத பயன்பாட்டுக்கு ஏற்றவாறு உருவாக்கப்பட்டு உள்ளது. மேலும் டாக்சி வாகனங்களுக்கு சிறப்பு சலுகையாக நான்காவது மற்றும் ஐந்தாவது ஆண்டு அல்லது 1,80,000 கிலோமீட்டர் வரை நீட்டிக்கப்பட்ட வாரென்டியை ஹூண்டாய் அளிக்க முடிவு செய்துள்ளது.
ஹூண்டாய் வெளியிட்டுள்ள கணக்கின் படி கூறுகையில் இந்த மாடல்களின் மொத்த இயக்க செலவு ஒரு கிலோமீட்டருக்கு சுமார் 47 பைசா மட்டுமே என தெரிவித்துள்ளது. இது டாக்சி உரிமையாளர்களுக்கு லாபகரமாக இருக்கும். மேலும் புதிய ஓட்டுனர்களுக்கு பலன் அளிக்கும் வகையில் 72 மாதங்கள் வரை தவணை அளிக்கும் நிதி வசதிகளும் வழங்க ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.
ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்த அறிமுகத்துடன் இந்தியாவின் வணிக போக்குவரத்து சந்தையில் புதிய போட்டியை உருவாக்கியுள்ளது. இப்பிரிவில் இதுவரையில் மாருதி சுசூகி ஆட்சி செய்து வந்த நிலையில் தற்போது ஹூண்டாய் இறங்கியுள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications