தென் கொரியாவை தளமாகக் கொண்ட ஹூண்டாய் மோட்டார் இந்தியா, விரைவில் இந்தியாவின் மிகப்பெரிய IPO வெளியிடத் தயாராகி வருகிறது. இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையம் (SEBI) இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.
இந்த ஐபிஓ மூலம் நிறுவனம் சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் வாகனத் துறையில் முன்னணி வகிக்கும் ஹூண்டாய், இந்த நிதியை தனது உற்பத்தி திறனை அதிகரிக்கவும், புதிய மாடல்களை அறிமுகப்படுத்தவும் பயன்படுத்திக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2003 ஆம் ஆண்டில் மாருதி சுசூகி இந்தியாவில் ஐபிஓ வெளியிட்டதைத் தொடர்ந்து, அடுத்த ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் ஐபிஓ வெளியிடுகிறது என்பதால் கூடுதல் ஸ்பெஷலாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ஹூண்டாய் தனது சென்னை தொழிற்சாலையை ஏற்கனவே சொன்னப்படி முக்கிய ஏற்றுமதி ஹப் ஆக மாற்றி வருகிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் சென்னை தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட தனது எக்ஸ்டர் என்டரி மாடல் எஸ்யூவி காரை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எக்ஸ்டர் மாடல் கார் இப்போது தென்னாப்பிரிக்காவில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும், இது இந்தியாவிலிருந்து தென்னாப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எட்டாவது மாடலாகும் என்று ஹூண்டாய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் தென்னாப்பிரிக்காவுக்கு முதல் பேட்ச் ஆக சுமார் 996 எக்ஸ்டர் கார்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியுள்ளது என்று கூறியது. ஹூண்டாய் ஏற்கனவே கிராண்ட் i10 NIOS, Aura, i20, i20 N Line மற்றும் வென்யூ உள்ளிட்ட மாடல்களை ஏற்றுமதி செய்கிறது.
"ஹூண்டாய் நிறுவனத்திற்கு தென்னாப்பிரிக்கா ஒரு முக்கியமான ஏற்றுமதி சந்தையாக இருந்து வருகிறது" என்று ஹூண்டாய் மோட்டார் இந்தியா செயல்பாடு தலைவர் - கார்பரேட் திட்டமிடல் ஜே வான் ரியூ கூறினார். எங்கள் நிறுவனத்தின் தமிழ்நாடு ஆலையில் தயாரிக்கப்படும் பெரும்பாலான மாடல்கள் தென்னாப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்று அவர் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications