திடீரென வந்த இடைகால சம்பள உயர்வு.. 4 நிறுவனத்தால் ஹூண்டாய் ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தை யாரும் எதிர்பார்க்காத வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது, குறிப்பாக பெரிய எஸ்யூவி கார்கள், எலக்ட்ரிக் கார்கள், சிஎன்ஜி கார்கள் என மக்கள் புதிய தொழில்நுட்பத்தையும், மாற்றத்தையும் வேகமாக ஏற்றுக்கொள்ள துவங்கியிருக்கும் காரணத்தால் வர்த்தகம் மற்றும் உற்பத்தியை நிர்வாகம் செய்ய முடியாமல் நிறுவனங்கள் தவித்து வருகிறது.

இந்த நிலையில் ஹூண்டாய் முக்கியமான பிரச்சனையை எதிர்கொண்டு வருகிறது. இந்தியாவில் 4 முக்கிய நிறுவனங்கள் தங்களுடைய வர்த்தகத்தைப் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய துடித்து வரும் வேளையில் ஹூண்டாய் நிறுவனங்களின் அதிகாரிகளை அதிகளவில் ஈர்த்து வருகின்றனர், இதனால் எப்போதும் குறைவான அட்ரிஷன் அளவீட்டைக் கொண்டு இருக்கும் ஹூண்டாய் தற்போது அதிக எண்ணிக்கையிலான ஊழியர்கள் வெளியேற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.

திடீரென வந்த இடைகால சம்பள உயர்வு.. 4 நிறுவனத்தால் ஹூண்டாய் ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

ஊழியர்கள் வெளியேற்றத்தைத் தடுக்கவும், இந்த பண்டிகை காலத்தில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற வேண்டும் என்ற இலக்குடன் ஹூண்டாய் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு திடீரென இடைக்கால சம்பள உயர்வைக் கொடுத்துள்ளது.

பொதுவாக ஒவ்வொரு ஊழியர்களுக்கும் வருடாந்திர சம்பள உயர்வு அளிக்கப்படும், இதைத் தாண்டி ஹூண்டாய் நிறுவனம் தற்போது 1-2 சதவீதம் அளவிலான சம்பள உயர்வை இடைக்கால சம்பள உயர்வாகக் கொடுத்துள்ளது.

ஆனால் இதை ஹூண்டாய் ஊழியர் நலன் திட்ட நடவடிக்கை எனவும், ஊழியர்கள் வெளியேற்றம் குறித்து எங்களுக்கு எவ்விதமான அச்சமும் இல்லை என தெரிவித்துள்ளது.

இந்தியா ஆட்டோமொபைல் சந்தையில் எப்போதும் முதல் இடத்தில் மாருதி சுசூகி, இரண்டாவது இடத்தில் இருந்த ஹூண்டாய் நிறுவனத்தை 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது. ௨வது இடத்திற்காக ஒவ்வொரு மாதமும் டாடா கார்ஸ் மற்றும் மஹிந்திரா போட்டிப்போட்டு வருகிறது.

தற்போது இந்திய கார் விற்பனை சந்தையில் வேகமாக வளர்ந்து வரும் டாடா, மஹிந்திரா போன்ற நிறுவனங்களும், புதிதாக களமிறங்கி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற இலக்குடன் இருக்கும் வின்பாஸ்ட், JSW மோட்டார்ஸ் ஆகியவை அதிகளவில் ஹூண்டாய் நிறுவன ஊழியர்களை ஈர்த்து வருவதாகவும், குறிப்பாக சேல்ஸ், மார்கெட்டிங் பிரிவில் இருக்கும் அதிகாரிகளை அதிக எண்ணிக்கையில் ஈர்த்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதேபோல் தமிழ்நாட்டு நிறுவனங்களை ஈர்க்க வேண்டும் என ஆந்திரா, உத்தர பிரதேசம், ஹரியானா மாநில அரசுகள், கைடென்ஸ் தமிழ்நாடு அமைப்பின் ஊழியர்களை ஈர்க்க முயற்சிக்கும் காரணத்தால் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு கொடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

கிட்டத்தட்ட இதை நடவடிக்கையைத் தான் ஹூண்டாய் எடுத்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் 2026ஆம் நிதியாண்டில் உள்நாட்டு விற்பனை 2 சதவீதம் குறைந்துள்ளது, இதேபோல் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 5 சதவீதத்தில் இருந்து 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+