இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் என மாறி மாறி மின்சார வாகனங்களை ஊக்கப்படுத்தி வருகின்றன. குறிப்பாக இதன் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அண்டை நாடுகளில் மின்சார வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் அவ்வளவாக இன்னும் விழிப்புணர்வு இல்லை எனலாம்.
இது ஒரு புறம் வருங்காலத்தில் உற்பத்தி துறையை ஊக்குவிக்கும் என்றாலும், அதற்கான கட்டமைப்புகள் என்பது சரியான இல்லை என்பதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது.
மின்சார வாகனங்களின் விலை அதிகம்
அதோடு மின்சார வாகனங்களின் விலையும், மூல பொருட்களீன் விலையும் மிக அதிகம் என்பதால் மக்கள் அவற்றில் கவனம் செலுத்துவதில்லை. எப்படி இருந்தாலும் இந்த மின்சார வாகனங்களுக்கு வருங்காலத்தில் நல்ல எதிர்காலம் உண்டு என்பதை மனதில் கொண்டு, ஒவ்வொரு வாகன உற்பத்தி நிறுவனமும் இதற்கு தயாராகிக் கொண்டு வருகின்றன.
களமிறங்கும் ஹூண்டாய்
உண்மையில் சொல்லப்போனால் மின்சார வாகனங்கள் மீது தனிக் கவனம் செலுத்தி வருகின்றன. மின்சார வாகனங்களில் உள்ள முக்கிய பிரச்சனையே அதிக விலை என்பது தான். ஆக அதனையே மையாக வைத்து, இந்திய வாகன சந்தையை கைபற்ற ஹூண்டாய் இந்தியா நிறுவனம் களமிறங்கியுள்ளது.
குறைந்த விலையில் களமிறக்க திட்டம்
அந்த வகையில் மின்சார வாகனங்களை குறைந்த விலைக்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது தான் இந்த நிறுவனத்தின் முன்னுரிமையாகவும் உள்ளதாக தெரிவித்துள்ளது. எங்களிடம் தயாரிப்பு மற்றும் தொழில் நுட்பம் உள்ளது. நாங்கள் இந்திய சந்தை நிலை மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மதிப்பாய்வு செய்கிறோம். நாங்கள் சிலவற்றை இங்கே கொண்டு வருவோம்.
இந்திய சந்தை சிறப்பாக உள்ளது
இந்திய சந்தை எங்களுக்கு சிறப்பாக உள்ளது. ஆக எங்களது முன்னரிமைகளில் இந்தியாமுதலிடத்தில் உள்ளது என்று ஹூண்டாயின் நிர்வாக தலைவர் எஸ் எஸ் கிம் கூறியுள்ளார். இந்தியாவில் இந்த நிறுவனத்தின் வெற்றியில், மின்மயமாக்கல் என்பது முக்கிய பங்கு வகிக்கும்.
பல மின்சார வாகனகள்
ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் ஆரம்பத்தில் மின்சார தொழில் நுட்பத்தினை ஏற்றுக் கொண்டவர்களில் ஒன்றாகும். மேலும் எங்களிடம் பல்வேறு மின்சார வாகனங்கள் உள்ளன. ஹைட்ரஜன் எரிபொருள் வாகன தொழில் நுட்பத்திலும் நாங்கள் முன்னேறியுள்ளோம். ஹூண்டாய் மற்றும் டோயோட்டா நிறுவனங்கள் மட்டுமே உலக வாகன சந்தையில் இந்த வாகனங்களை விற்பனை செய்கின்றன என்றும் கிம் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications