மும்பை: இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய் இந்தியா பிரைவேட் நிறுவனம் ஐபிஓ தாக்கல் செய்வதற்கான ஆவணங்களை வெள்ளிக்கிழமை (இன்று) செபியிடம் தாக்கல் செய்துவிடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஐபிஓ-விற்கு செபி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களில் இந்தியாவில் கார் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் முதல் ஐபிஓ-வாக இது இருக்கும் என தெரிய வந்துள்ளது.

ஹூண்டாய் இந்தியா தற்போது வெளியிட திட்டமிட்டுள்ள ஐபிஓ-வில் 142 மில்லியன் பங்குகள் இருக்கின்றன. அதாவது நிறுவனத்தின் பங்குகளில் இது 17.5% ஆகும். ஹூண்டாய் இந்தியாவின் தாய் நிறுவனம் தன் வசமுள்ள பங்குகளை விற்பனை செய்வதற்காக இந்த ஐபிஓ வெளியீட்டிற்கு விண்ணப்பிக்கிறது. இந்த ஐபிஓ மூலம் 2.5 பில்லியன் முதல் 3 பில்லியன் டாலர்கள் வரை நிதி திரட்ட இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ-வாக ஹூண்டாய் மோட்டார் ஐபிஓ இருக்கலாம் என முதலீட்டாளர்கள் கணிக்கின்றனர். நடப்பு ஆண்டில் இந்தியாவின் பட்டியலிடப்படக்கூடிய மிகப்பெரிய ஐபிஓவாக இருக்கும் என்றும் இதனை பெறுவதற்கு சந்தையில் கடுமையான போட்டி இருக்கும் என்றும் தெரிகிறது.
2003ஆம் ஆண்டில் ஜப்பானை சேர்ந்த மாருதி சுசுகி நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்து இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டது. இதனை அடுத்து தென் கொரியாவை சேர்ந்த ஒரு கார் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் பங்குச் சந்தையில் ஐபிஓ வெளியிடுவது இது முதல் முறையாக இருக்கும். தென்கொரிய நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் 1998 ஆம் ஆண்டு தன்னுடைய சான்ட்ரோ கார்கள் மூலம் இந்திய சந்தையில் நுழைந்தது.
தற்போது இந்தியாவில் கார் உற்பத்தி நிறுவனங்களில் 15 சதவீத சந்தையை ஹூண்டாய் ஆக்கிரமித்துள்ளது. மாருதி சுசுகிக்கு அடுத்தபடியாக, இந்திய சந்தையில் ஆதிக்கம் செலுத்தி வரக்கூடிய வெளிநாட்டு கார் தயாரிப்பு நிறுவனம் ஹூண்டாய் ஆகும். இந்தியாவில் விற்பனையாக கூடிய நான்கு கார்களில் ஒரு கார் ஹூண்டாய் நிறுவனத்திற்கு சொந்தமானது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் தங்களது சொந்த நாடான தென் கொரியாவுக்கு நிகராக இந்தியாவிலும் கார் விற்பனை செய்துள்ளது.
கடந்த ஓராண்டு காலத்தில் இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் கார் விற்பனை விகிதம் 10% உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு 50,201 யூனிட்டுகள் விற்பனையான நிலையில் நடப்பு ஆண்டில் அது 63,701 யூனிட்களாக அதிகரித்துள்ளது.கூடுதலாக 13,500 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது.
ஹூண்டாயின் ஐபிஓவிற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் நடப்பாண்டில் ஐபிஓ சந்தையில் மிக பரபரப்பாக பேசப்படும் ஒரு ஐபிஓ-வாக இது இருக்கும்.
Story written by: Devika
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications