இந்தியாவில் எலக்ட்ரிக் கார்களுக்கும், ஹைப்ரிட் கார்களுக்கும் மிகவும் வலிமையான வர்த்தக சந்தை உருவாகியிருக்கும் காரணத்தால், இதுநாள் வரையில் இத்துறையில் நுழைய தயங்கி வந்த பல முன்னணி நிறுவனங்களும் தற்போது அனைத்து வடிவத்திலும் எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்ய துவங்கியுள்ளது. இதில் முக்கியமானது ஹூண்டாய்.
எலக்ட்ரிக் வாகன சந்தையில் அதிரடி காட்ட தயாராக இருக்கும் ஹூண்டாய் நிறுவனம், இதுநாள் வரையில் ஆடம்பர பிரிவிலும், மிட் வேரியன்ட் பிரிவில் தான் எலக்ட்ரிக் கார்களை உலக நாடுகளில் அறிமுகம் செய்து வந்தது.

இதுவும் இந்தியாவில் ஆடம்பர பிரிவில் மட்டும் தான் ஹூண்டாய் தனது எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த நிலையில் ஹூண்டாய் தற்போது மலிவு விலையில் Hyundai Inster EV என்ற புதிய மைக்ரோ SUV எலக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஹூண்டாய் தனது பிரபலமான காஸ்பர் (Casper) என்ற சப்-காம்பேக்ட் மைக்ரோ எஸ்யூவி காரின் தளத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இன்ஸ்டர் ஈ.வி, எலக்ட்ரிக் வாகன சந்தையில் புதிய ஆட்டத்தை ஆட திட்டமிட்டு உள்ளது.

இந்தியாவில் அறிமுகம்: ஹூண்டாய் நிறுவனம் இதுவரை இன்ஸ்டர் ஈ.வி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடவில்லை. இருப்பினும், ஹூண்டாய் கிரெட்டா ஈ.வி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இன்ஸ்டர் ஈ.வி இந்தியாவில் அறிமுகமாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்திய சந்தையில், சிட்ரோன் ஈசி3 (Citroen eC3) மற்றும் பஞ்ச் ஈ.வி (Punch EV) போன்ற எலக்ட்ரிக் கார்களுக்கு போட்டியாக இன்ஸ்டர் ஈ.வி களமிறங்க உள்ளது. இன்ஸ்டர் ஈ.வி கார் பார்க்கும் போது மாருதி எஸ்-பிரஸ்ஸோ-வுக்கு அண்ணனாகவும், மினி கூப்பர் காருக்கு தம்பியாகவும் உள்ளது.

காஸ்பர் மாடலின் டிசைனை அடிப்படையாகக் கொண்ட இன்ஸ்டர் ஈ.வி, வட்ட வடிவிலான LED லைட், அவற்றைச் சுற்றிலும் பிக்சல் வடிவிலான இண்டிகேட்டர்களையும் கொண்டுள்ளது. இந்த விளக்குகளுக்கு இடையில், ப்ரென்ட் கேமரா, ADAS சென்சார் மற்றும் சார்ஜிங் போர்ட் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன.
பேட்டரி மற்றும் செயல்திறன்: இன்ஸ்டர் ஈ.வி மாடலில் 42kWh மற்றும் 49kWh என இரண்டு பேட்டரி தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இரண்டு பேட்டரி தேர்வுகளுமே ஒரே எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கப்பட்டுள்ளன.
சிறிய 42kWh பேட்டரி கொண்ட மாடல் 95bhp திறனையும், 0 முதல் 100 கிமீ வேகத்தை 11.7 வினாடிகளில் எட்டும் திறனையும் கொண்டுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 140 கிமீ ஆகும்.

பெரிய 49kWh பேட்டரி கொண்ட மாடல் 113bhp திறனையும், 0 முதல் 100 கிமீ வேகத்தை 10.6 வினாடிகளில் எட்டும் திறனையும் கொண்டுள்ளது. அதிகபட்ச வேகம் மணிக்கு 150 கிமீ ஆகும்.
டிரைவிங் ரேஞ்ச்: 42kWh பேட்டரி கொண்ட இன்ஸ்டர் ஈ.வி முழு சார்ஜில் சுமார் 300 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டது. 49kWh பேட்டரி கொண்ட மாடல், முழு சார்ஜில் சுமார் 350 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டது.
பிற அம்சங்கள்: இன்ஸ்டர் ஈ.வி 280 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டுள்ளது. பின் இருக்கைகளை மடித்தால், 351 லிட்டர் வரை பூட் ஸ்பேஸ் கிடைக்கும். காரின் டிசைன் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. இந்திய எலக்ட்ரிக் வாகன சந்தையில் புதிய அத்தியாயம் எழுத தயாராக இருக்கிறது ஹூண்டாய்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications