இந்திய ஆட்டோமொபைல் துறையில் பல வருடங்களாக 2வது இடத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்காமல் கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஐபிஓ இன்று திறக்கப்பட உள்ளது. இந்திய முதலீட்டாளர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட IPO ஆக இது இருந்தாலும் இதில் இருக்கும் ரிஸ்க்கான விஷயங்களை கட்டாயம் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.
இந்த IPO மூலம் ஹூண்டாய் சுமார் 27,870.16 கோடி ரூபாய் அளவிலான நிதியை திரட்ட உள்ளது. இது இந்தியாவில் இதுவரை நடந்த மிகப்பெரிய IPO-வாக இருக்கப்போகிறது. இதற்கு முன்பு நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி தான் 21,008 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓ வெளியிட்டு முதல் இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது இந்த இடத்தை ஹூண்டாய் கைப்பற்றுகிறது.

2009 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய பயணிகள் வாகன உற்பத்தியாளராக தொடர்ந்து இருக்கும் ஹூண்டாய் மோட்டார் இந்தியாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக இந்த ஐபிஓ விளங்குகிறது.
இந்த ஐபிஓ-வில், ஹூண்டாய் மோட்டார் கம்பெனி என்ற அதன் தென் கொரிய தாய் நிறுவனம் 14.22 கோடி பங்கு பங்குகளின் விற்பனை செய்வதன் மூலம் 27,870.16 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட உள்ளது. இந்த பங்குகளை முதலீட்டாளர்கள் 1,865 முதல் 1,960 ரூபாய் வரையிலான விலையில் வாங்க முடியும்.
2003 ஆம் ஆண்டு மருதி சுசூகி இந்தியாவின் IPO-க்குப் பிறகு இந்தியாவில் ஒரு கார் உற்பத்தியாளர் ஐபிஓ வெளியிடுகிறது என்றால் அது ஹூண்டாய் மோட்டார் இந்தியா தான். இதனாலேயே பெருமளவிலான ரீடைல் முதலீட்டாளர்கள் இந்த ஐபிஓ-வில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் ஹூண்டாய் ஐபிஓ-வில் முதலீடு செய்யும் முன்பு இதில் உள்ள ரிஸ்கான விஷயங்களை கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஐபிஓ முதலீட்டை போலவே, ஹூண்டாய் மோட்டார் இந்தியா IPO-விலும் சில முக்கிய அபாயங்கள் உள்ளன. இந்த நிறுவனத்தின் உற்பத்திக்குத் தேவையான உதிரிப்பாகங்கள் மற்றும் பொருட்களுக்காக குறைந்த எண்ணிக்கையிலான சப்ளையர்களை மட்டுமே அதிகம் நம்பியிருக்கின்றன. ஹூண்டாய் இந்தியா அதன் சப்ளையர் வலையமைப்பை பன்முகப்படுத்தாதது பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.
இதேபோல் சப்ளையர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்தால் உதிரிபாகங்கள் மற்றும் பொருட்களின் விலையில் ஏற்படும் உயர்வு அல்லது பொருட்களின் சப்ளையில் ஏற்படும் பாதிப்பு நிறுவனத்தின் வர்த்தகம் மற்றும் லாப அளவீட்டில் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தும்.
மேலும், ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் செயல்பாடுகள், பாகங்கள் மற்றும் பொருட்களுக்காக அதன் தாய் நிறுவனமான தென் கொரியா நாட்டை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார் கம்பெனியை அதிகம் சார்ந்துள்ளது. இந்த நிலையில் ஐபிஓ-வுக்கு பின்பு இந்திய கிளைகும் - தென் கொரிய தாய் நிறுவனத்திற்குமான உறவு தொடர்ந்து சிறப்பாக இருக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா IPO-வின் செயல்திறனை முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனிப்பார்கள், ஏனெனில் இதன் வெற்றி அடுத்தடுத்து ஆட்டோமொபைல் துறையில் இருக்கும் பிற நிறுவனங்களையும் IPO வெளியிட வழிநடத்தும்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications