மும்பை: நடப்பு ஆண்டில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஐபிஓவான ஹூண்டாய் நிறுவனத்தின் ஐபிஓ அக்டோபர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்திய பங்குச் சந்தையில் கடந்த சில ஆண்டுகளாகவே பல்வேறு நிறுவனங்களின் ஐபிஓ வெளியிடப்பட்டு அவற்றின் மதிப்பு கணிசமான அளவு உயர்ந்து வருகிறது. இதனால் பல்வேறு நிறுவனங்களும் ஐபிஓ மூலம் நிதி திரட்டுவதை விரும்புகின்றன. அந்த வகையில் நடப்பு ஆண்டில் அனைவரும் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்தின் ஐபிஓ தான் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் ஐபிஓ.
தென்கொரியாவை சேர்ந்த வாகன தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், இந்தியாவில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா என்ற பெயரில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னணி வாகன தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக இது செயல்படுகிறது. இந்தியாவில் தன்னுடைய செயல்பாடுகளை விரிவாக்கம் செய்வதற்கு ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக ஐபிஓ மூலம் நிதி திரட்ட உள்ளது.

இந்திய சந்தையில் 2013ஆம் ஆண்டு ஜப்பானை சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனமான மாருதி சுசுகி ஐபிஓ வெளியீடு செய்தது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மிகப்பெரிய ஒரு வாகன உற்பத்தி நிறுவனத்தின் ஐபிஓ வெளியாக உள்ளது. இதனால் பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் ஆர்வமாக இந்த ஐபிஓ வில் முதலீடு செய்வதற்காக காத்திருக்கின்றனர். இதன்படி 25,000 கோடி ரூபாயை திரட்டும் வகையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஐபிஓ வெளியீடு செய்கிறது. ஆஃபர் ஃபார் தி சேல் முறையில் 10 ரூபாய் முக மதிப்பு கொண்ட 142,194,700 பங்குகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஹூண்டாய் இந்தியா நிறுவனம் ஐபிஓ வெளியீடு செய்வதற்கு செப்டம்பர் 24 ஆம் தேதி செபி அனுமதி தந்தது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் இந்தியாவில் 1998 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. தற்போது இந்த நிறுவனம் 13 மாடல் கார்களை விற்பனை செய்து வருகிறது. தன்னுடைய புகழ்பெற்ற சாண்ட்ரோ கார்கள் மூலம் இந்திய சந்தையில் கால்பதித்தது இந்த நிறுவனம். இந்தியாவில் தற்போது விற்பனையாகும் நான்கு கார்களில் ஒன்று ஹூண்டாய் நிறுவன கார்கள் ஆகும். மாதந்தோறும் இந்தியாவில் இந்த நிறுவனம் சுமார் 60,000 கார்களை விற்பனை செய்கிறது.
இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் ஹூண்டாய் , சந்தையில் தற்போது 15% பங்கினை கொண்டுள்ளது. உலகின் மூன்றாவது பெரிய கார் சந்தை தான் இந்தியா. இங்கே மாருதி சுசுகிக்கு அடுத்தப்படியாக கணிசமான சந்தையை கொண்டிருக்கும் ஒரே வெளிநாட்டு நிறுவனம் ஹூண்டாய் ஆகும்.
Written by: Devika
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications