இந்தியாவில் தீபாவளி சீசன் என்பதை காட்டிலும் ஐபிஓ சீசன் என்று கூறினால் தான் சரியாக இருக்கும், கடந்த 3 மாதங்களாக சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் ஐபிஓ வெளியிட்டு முதலீட்டை ஈர்த்து வருகிறது. இந்த வரிசையில் பல தசாப்தங்களை கடந்து கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று இந்திய பங்குச்சந்தையை எட்டிப்பார்க்கிறது. இதனால் முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் இந்த ஐபிஓ-வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தென் கொரியாவின் ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியா மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு தனது தயாரிப்புகளையும், வர்த்தகத்தையும் விர்வாக்கம் செய்ய உள்ளது. இதன் அடிப்படையில் அடுத்த வாரம் ஹூண்டாய் ஐபிஓ தொடங்க உள்ளது. இந்த IPO இந்தியாவில் மிகப்பெரிய ஐபிஓ-வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஐபிஓ-வில் ஹூண்டாய் நிறுவனம் ஒரு பங்கை ரூ.1,865-1,960 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை வரம்பின் மேல்நிலையில் கணக்கிட்டால் தென் கொரியாவின் இந்திய பிரிவின் மதிப்பு 19 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் இந்த ஐபிஓ மூலம் சுமார் 3 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதியை திரட்ட உள்ளது. இந்த ஐபிஓ-வில் அக்டோபர் 14 அன்று நிறுவன முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு வாயில் திறக்கப்படும். அதைத் தொடர்ந்து அக்டோபர் 15 முதல் 17 வரை சில்லறை மற்றும் பிற முதலீட்டாளர்களுக்கான முதலீட்டு வாயில் திறக்கப்படும். அக்டோபர் 22 அன்று தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் மும்பை பங்குச் சந்தை (BSE) ஆகியவற்றில் பட்டியலிடப்பட வாய்ப்புள்ளது.
பிற IPO-க்களைப் போல் அல்லாமல், ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் ஐபிஓ-வில் புதிய பங்குகளை வெளியிடாது. அதற்கு பதிலாக, தென் கொரியாவின் தாய் நிறுவனம் இந்திய துணை நிறுவனத்தில் உள்ள அதன் 17.5% பங்குகளை OFS வழியில் வெளியேற்றும்.
2003 ஆம் ஆண்டில் மாருதி சுசூகியின் IPO-க்குப் பிறகு இந்தியாவில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் துறை நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட உள்ளது.
இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சமீபத்திய காலத்தில் சாதனை உயர்வை எட்டியுள்ள நிலையில், பல்வேறு தொழில்துறையில் இருக்கும் நிறுவனங்கள் முதலீட்டு சந்தை உச்சத்தில் இருக்கும் வேளையிலேயே நிதியை திரட்ட IPO-க்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றன. ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் IPO, நிறுவன மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் இருவரிடமிருந்தும் அதிக ஆர்வத்தை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் இரண்டாவது மிகப்பெரிய கார் தயாரிப்பாளராக இருப்பதால், இந்த நிறுவனத்தின் வர்த்தக ஆதிக்கத்திற்கு இணையாக ஐபிஓ-வில் முதலீட்டு விருப்பத்தை பெறும் என முதலீட்டு சந்தையில் கருத்து நிலவுகிறது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா, ஜூன் மாதம் தனது DRHP அறிக்கையை தாக்கல் செய்தது, அதை தொடர்ந்து சில வாரத்திலேயே SEBI இதற்கு ஒப்புதல்களை அளித்தது. இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்திற்கு இருக்கும் மதிப்பை பணமாக்கும் வீதம் தற்போது தென்கொரிய ஹூண்டாய் நிர்வாகம் ஐபிஓ வெளியிடுகிறது. இந்த நிதி திரட்டல் மூலம் இந்தியாவில் வர்த்தகத்தை மட்டும் அல்லாமல் வெளிநாட்டு வர்த்தகத்தையும் மேம்படுத்த இப்பணத்தை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
2022 ஆம் ஆண்டில் லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (LIC) ஆல் வெளியிடப்பட்ட ரூ.21,000 கோடி (2.7 பில்லியன் டாலர்) ஐபிஓ-வை விட ஹூண்டாய் ஐபிஓ அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. IPO-க்குப் பிறகு, ஹூண்டாய் மோட்டார் நிர்வாகம், ஹூண்டாய் மோட்டார் இந்தியாவில் 82.5% பங்கு பங்குகளை மட்டுமே வைத்திருக்கும்.
கொரிய பங்குச் சந்தையில், ஹூண்டாய் மோட்டாரின் பங்கு விலை கடந்த ஒரு வருடத்தில் 34%க்கும் அதிகமான லாபத்தைத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications