இந்தியாவின் 2வது பெரிய கார் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக இருக்கும் ஹூண்டாய் ஐபிஓ வெளியிட்ட பின்பு இந்திய வர்த்தகத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்வது மட்டும் அல்லாமல் ஐபிஓ வெளியீட்டின் போது உதிரி பாகங்களுக்கான சப்ளையர் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. இதை துறைக்கு கொரியாவில் இருந்து புதிதாக ஒரு நிறுவனத்தைக் கொண்டு வர உள்ளது.
ஹூண்டாய் மோட்டார் கார்ப் கீழ் பல கிளை மற்றும் துணை நிறுவனங்கள் உள்ளது, இதில் ஒன்று தான் Hyundai Kefico. இந்த நிறுவனம் வாகனங்களுக்கான எலக்ட்ரானிக் உதிரிபாகங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமாகும்.

இந்த நிலையில் ஹூண்டாய் மோட்டோ கார்ப் ஐபிஓ வெளியிட்ட பின்பு தனது கிளை நிறுவனமான Hyundai Kefico இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் புதிய உற்பத்தி ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது. இதற்காக கஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பிள்ளைப்பாக்கம் பகுதியில் இருக்கும் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி பகுதியில் (EMC) சுமார் 24 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய தொழிற்சாலையில் கன்ட்ரோல் யூனிட்ஸ், MCU இண்டிகிரேடெட் போர்ட்ஸ் மற்றும் GDI DPM போன்ற முக்கியமான எலக்ட்ரானிக்ஸ் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்யப்படும். இந்த முதலீட்டின் மூலம் Hyundai Kefico ஹூண்டாய் மற்றும் கியா பிராண்டின் இந்திய வர்த்தகத்திற்கு முக்கிய பங்கு வகிக்கத் தயாராகிறது.
1987 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட Hyundai Kefico, வாகன எலக்ட்ரானிக் கட்டுப்பாட்டு அமைப்புகளை உருவாக்கி, பாதுகாப்பான மற்றும் எரிபொருள் சிக்கனமான வாகன இயக்க அனுபவத்தை ஹூண்டாய் மற்றும் கியா பிராண்ட் கார்களுக்கு வழங்கி வருகிறகு.
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் ஹூண்டாய் மிகப்பெரிய தொழிற்சாலையை வைத்திருக்கும் வேளையில், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் முதல் இடத்தை பிடிக்கும் பொருட்டு உதிரிபாக கட்டமைப்பை உள்நாட்டிலேயே உருவாக்கி தனது வாகன உற்பத்தியை அதிகரிப்பது மட்டும் அல்லாமல் குறைந்த விலையில் தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.
இதன் மூலம் தமிழ்நாட்டில் ஹூண்டாய் எகோசிஸ்டம் மிகப்பெரியதாக விரிவாக்கம் அடைய உள்ளது. இதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, மாநிலத்தின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி திறனை அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications