இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிப்பதில் மத்திய அரசு தீவிரமாக இருக்க முக்கியமான காரணம் நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்பதற்காகத் தான். இதன் ஒரு பகுதியாக, அனைத்து முன்னணி கார் மற்றும் பைக் நிறுவனங்களும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளது.
இதன் அடுத்தகட்டமாக எலக்ட்ரிக் வாகன பேட்டரி உற்பத்தியை உள்ளூர்மயமாக்குவதில் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தனது முயற்சிகளைத் தொடர்ந்துள்ளது. இதுநாள் வரையிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு எலக்ட்ரிக் வாகனங்கள் அனைத்தும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பேட்டரி, தொழில்நுட்பம் கொண்டு தயாரிக்கப்பட்டது.

இந்த நிலையில் தென் கொரியாவின் முன்னணி வாகன தயாரிப்பாளர்களான ஹூண்டாய் மோட்டார் மற்றும் கியா கார்ப்பரேஷன் (Kia Corporation) நிறுவனங்கள் தனது எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரியை உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என முடிவு செய்துள்ளது.
இதற்காக ஹூண்டாய் மற்றும் கியா ஆகிய இரு நிறுவனங்களும் இந்திய எலக்ட்ரிக் வாகன பேட்டரி உற்பத்தியாளரான எக்சைடு எனர்ஜி சொல்யூஷன்ஸ் லிமிடெட் (Exide Energy Solutions Ltd) நிறுவனத்துடன் புதிய கூட்டணியில் கை கோர்த்துள்ளன.
ஹூண்டாய் மோட்டார் குழுமம் வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி மற்றும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்தில் ஹூண்டாய் மோட்டார் மற்றும் கியா ஆகியவை எக்சைடு எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளன.
இந்த கூட்டணியின் மூலம், இந்திய சந்தைக்குத் தேவையான எலக்ட்ரிக் வாகன பேட்டரி உற்பத்தியை உள்நாட்டிலேயே தயாரிக்கும் இலக்கை கொண்டுள்ளன. குறிப்பாக, லித்தியம் அயர்ன் பாஸ்பேட் (Lithium Iron Phosphate - LFP) செல்களை மையமாகக் கொண்ட பேட்டரி பேக்குகளை உற்பத்தி செய்ய இக்கூட்டணி திட்டமிட்டுள்ளன.
இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கும் எலக்ட்ரிக் வாகன மாடல்களில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பேட்டரிகளைப் பயன்படுத்த ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதன் மூலம் கார்களின் விலை குறையும், நம்பிக்கைதன்மை அதிகரிக்கும்.
மத்திய அரசின் நெட் ஜீரோ இலக்குகளை அடைவதற்கு எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அவசியம். இந்த நிலையில் ஹூண்டாய் 2025ல் அதிக எண்ணிக்கையிலான எலக்ட்ரிக் கார் மாடலை அறிமுகம் செய்ய உள்ளது, தற்போது இந்நிறுவனம் IONIQ5 மற்றும் Kona, கியா EV6 என்ற விலை உயர்ந்த ப்ரீமியம் காரை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.
ஹூண்டாய் மோட்டார், டாடா மோட்டார்ஸ்-க்கு போட்டியாக விலை குறைந்த அதிக எண்ணிக்கையில் தயாரிக்கப்படும் பட்ஜெட் கார்களை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது இதற்கு Exide Energy Solutions போன்ற நிறுவனத்தின் கூட்டணி அவசியம்
கொல்கத்தா-வை தலைமையிடமாகக் கொண்டு வாகனங்களுக்கான பேட்டரி தயாரிப்பில் 75 வருடங்களாக இயங்கி வரும் Exide Industries நிறுவனம் 2022ல் எலக்ட்ரிக் கார்களுக்கான பேட்டரியை தயாரிக்கும் முயற்சியில் துவங்கப்பட்டது தான் Exide Energy Solutions. இந்த முயற்சியின் சமீபத்தில் ஆந்திராவில் மிகப்பெரிய பேட்டரி தொழிற்சாலை அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஹூண்டாய், கியா நிறுவனங்களின் Exide Energy Solutions உடனான கூட்டணி அறிவிப்பு Exide Industries நிறுவனம் பங்குகளை தடாலடியாக உயர்த்தியுள்ளது. திங்கட்கிழமை வர்த்தகத்தில் Exide Industries பங்குகள் 321 ரூபாயில் இருந்து 398 ரூபாய் வரையில் உயர்ந்தது. இன்றும் கிட்டத்தட்ட இதே விலை அளவில் வர்த்தகம் செய்யப்படுகிறது.
ஹூண்டாய், கியா நிறுவனங்களின் Exide Energy Solutions உடனான கூட்டணி மூலம் மலிவு விலை எலக்ட்ரிக் கார்கள் அறிமுகம், கட்டாயம் டாடா மோட்டார்ஸ்-ன் EV பிரிவு ஆதிக்கத்திற்கு வேட்டு வைக்கும்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications