டெல்லி: மாருதி சுசூகி மற்றும் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் மே மாதம் முதல் உற்பத்தியினை தொடங்கலாம் என திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
கொரோனாவால் உலகமே ஸ்தம்பித்து போயுள்ள நிலையில், இந்தியாவிலும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளது.
இதனால் அத்தியாவசியம் தவிர அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் லாக்டவுன் மே 3வுடன் முடியவடையவுள்ள நிலையில், இனியும் கொரோனா லாக்டவுன் நீடிக்கப்படலாம் என்ற நிலை நீடித்து வருகின்றது.
உற்பத்தியினை தொடங்கலாம்
இதற்கிடையில் நாட்டில் உள்ள முக்கிய வாகன உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி நடவடிக்கைகளை நிறுத்தியது. இந்த நிலையில் அண்மையில் எம்ஜி மோட்டார்ஸ் அண்மையில் தனது உற்பத்தியினை மீண்டும் தொடங்கிய நிலையில், மாருதியும் ஹூண்டாயும் குஜராத்தில் தனது உற்பத்தியினை தொடரலாம் என்றும், இது குறித்த அறிந்தவர்கள் கூறுவதாக லைவ் மிண்ட் செய்திகள் கூறுகின்றன.
அனுமதி பெற்று உற்பத்தி
மேலும் மாருதியும் ஹூண்டாயும் அரச்சின் அனுமதி பெற்று அவற்றின் உற்பத்தி திறன்களில் வெறும் 20 - 30% உடன் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும் லாக்டவுன் நடவடிக்கைகள் தளர்த்தப்பட்டு தேவை மீட்கப்படும்போது உற்பத்தியினை மெதுவாக அதிகரிக்கும். உள்நாட்டு பயணிகள் வாகன சந்தையில் கிட்டதட்ட 70% கட்டுப்படுத்துகின்றன. இதனால் மாருதி மற்றும் ஹூண்டாய் உற்பத்தியினை தொடங்குவது வாகன தொழிலுக்கு மிகவும் முக்கியமானது.
மே மாதத்தில் மாருதி உற்பத்தி
மாருதி மே மாதத்தில் வெறும் 45,000 வாகனங்களை மட்டுமே உற்பத்தி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதே ஜூன் மாதத்தில் 65,000 வாகனங்களை உற்பத்தி செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் சராசரியாக உற்பத்தி செய்யும் 1,50,000 வாகனங்களில் இது பாதியாக இருக்கும்.
ஹூண்டாய் எவ்வளவு உற்பத்தி
இதே ஹூண்டாய் நிறுவனம் மே மாதத்தில் வெறும் 12,500 - 13,000 யூனிட்களில் தொடங்கி அளவுகளை படிப்படியாக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. பொதுவாக இந்த தென் கொரியா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் சுமார் 60,000 வாகனங்களை சென்னையில் உற்பத்தி செய்கிறது. எனினும் மற்ற வாகன உற்பத்தியாளர்கள் ஜூன் மாதத்தில் உற்பத்தியினை மீண்டும் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது.
முக்கிய எதிர்பார்ப்பு
எனினும் இவை அனைத்தும் உள்ளூர் அதிகாரிகளையும் விதிகளையும் சார்ந்தது. இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமையன்று குருகிராம் ஆலையில் பராமரிப்பு தொடங்க ஹரியான அரசிடம் அனுமதி பெற்றது. ஆக மே முதல் ஆலைகளை திறக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இது குறித்து அந்த நிறுவனங்கள் எதனையும் தெரிவிக்கவில்லை.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications