இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவிலான ஆதிக்கத்தை பெற்று மாருதி சுசூகி உடன் நேருக்கு நேர் அனைத்து பிரிவுகளிலும் போட்டிப்போட்டு வரும் ஹூண்டாய் மோட்டார் இந்தியா இந்தியாவில் தனது உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டு தமிழ்நாட்டில் அதிகப்படியான முதலீட்டை செய்ய முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் உற்பத்தி அளவை மேம்படுத்தும் நோக்கில் நீண்ட காலமாக தீர்வு காணப்படாமல் இருக்கும் மகாராஷ்டிராவின் தலேகான் பகுதியில் உள்ள அமெரிக்க ஜெனரல் மோட்டார் இந்தியாவின் கார் உற்பத்தி தொழிற்சாலையை கைப்பற்ற முடிவு செய்துள்ளது.

இதற்காக ஹூண்டாய் நிறுவனம் ஜெனரல் மோட்டார் தொழிற்சாலையை கைப்பற்ற சொத்து கொள்முதல் ஒப்பந்தத்தில் (APA) புதன்கிழமை கையெழுத்திட்டுள்ளது. ஜெனரல் மோட்டார்ஸ் தலேகான் ஆலையின் நிலம், கட்டிடங்கள் மற்றும் சில இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி உபகரணங்களை கையகப்படுத்தி தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸின் தலேகான் (Talegaon) தொழிற்சாலை கையகப்படுத்துவதில் சில முக்கிய நிபந்தனைகளை பூர்த்தி செய்வது மட்டும் அல்லாமல் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களிடமிருந்து ஒழுங்குமுறை ஒப்புதல்களைப் பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.
காரணம் இதற்கு பல வருடங்களாக ஜெனரல் மோட்டார்ஸின் தலேகான் (Talegaon) தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில், இதற்கு தீர்வு காணப்பட்ட பின்பு தான் முழுமையாக கைப்பற்ற வேண்டிய நிலை உள்ளது.
ஜெனரல் மோட்டார்ஸின் தலேகான் (Talegaon) தொழிற்சாலை வருடத்திற்கு சுமார் 1,30,000 கார்களை தயாரிக்கும் உற்பத்தி திறன் கொண்டது. இது ஹூண்டாய் நிறுவன கட்டுப்பாட்டிற்குளும், புதிய தொழில்நுட்பத்தை புகுத்துவதன் வாயிலாக கட்டாயம் 150000 கார்கள் வரையில் உற்பத்தையை ஹூண்டாய் மேம்படுத்தும்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா ஏற்கனவே இந்த ஆண்டின் துவக்கத்தில் முதல் பாதியில் அதன் உற்பத்தி திறனை 750,000 கார்களில் இருந்து 820,000 கார்களாக உயர்த்த திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்த நிலையில், ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலையின் கைப்பற்றல் மூலம் ஆண்டுக்கு 10 லட்சம் கார்களை இந்தியாவில் தயாரிக்கும் புதிய இலக்கை அடைய உள்ளது ஹூண்டாய்.

தென் கொரியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் நிறுவனம், அடுத்த 10 ஆண்டுகளில் 20,000 கோடி ரூபாயை தமிழ்நாட்டில் கார் உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய எலக்ட்ரிக் வாகனகளை அறிமுகப்படுத்தவும் முதலீடு செய்யப் போவதாக மே மாதம் தெரிவித்துள்ளது. இந்த 20,000 கோடி ரூபாயை முதலீட்டில் சென்னைக்கு அருகில் புதிய தொழிற்சாலையின் அமைத்து கார் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதேபோல் இன்னும் போர்டு நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலைக்கு தீர்வு காணப்படாமல் உள்ளது. ஹூண்டாய் ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலையை கைப்பற்றியதை போல் சென்னை ஃபோர்டு தொழிற்சாலையை கைப்பற்றுமா..? ஜெனரல் மோட்டார்ஸ் தொழிற்சாலையில் ஹூண்டாய் தனது உற்பத்தி பணிகளை 2025ல் துவங்க உள்ளது.


Click it and Unblock the Notifications