தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் சந்தையில் ராஜாவாக விளங்கும் ஹூண்டாய் மோட்டர்ஸ் இந்தியா நிறுவனம் தனது CSR கிளை நிறுவனத்தின் வாயிலாகச் சுமார் 10 கோடி ரூபாய் அளவிலான நிதியை ரொரோனா நிவாரணமாக அளித்துள்ளது.
ஹூண்டாய் நிறுவனம் சென்னையில் இருக்கும் தொழிற்சாலை மூலம் இந்திய விற்பனைக்கு மட்டும் அல்லாமல் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறது. இவை அனைத்திற்கும் தாண்டி இந்தியாவின் முன்னணி கார் விற்பனை நிறுவனமாகவும் ஹூண்டாய்த் திகழ்கிறது.
ஹூண்டாய் மோட்டார்ஸ்
கொரோனா-வை எதிர்த்துப் போராடும் ஹூண்டாய் கேர்ஸ் 3.0 திட்டத்தின் கீழ் 5 கோடி ரூபாயை முதல்வர் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்துள்ளது. மீதமுள்ள 5 கோடி ரூபாய் தொகைக்குப் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் கொடுப்பதாகத் தெரிவித்துள்ளது.
5 கோடி ரூபாய்க்கு மருத்துவ உபகரணங்கள்
தற்போது வெளியான அறிவிப்பின் படி ஹூண்டாய் நிறுவனம் ஹைய் ப்லோ நேசல் ஆக்சிஜன் மெஷின், பிபாப் மெஷின், ஆக்சின் கான்சென்டிரேட்டார்ஸ் மற்றும் இரண்டு ஆக்சிஜன் பிளாட்களைத் தமிழ்நாட்டில் அமைத்துக்கொடுக்கவும் உள்ளது.
ஆக்சிஜன் பிளான்ட்
தமிழ்நாட்டில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வரும் வேளையில் மிகவும் அவசியமான ஆக்சிஜன் பிளான்டுகளைத் தண்டையார்பேட்டை மற்றும் தாம்பரம் அரசு மருத்துவமனையில் அமைத்துக்கொடுக்க உள்ளது ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம்.
ஹூண்டாய் இந்தியா
இதுகுறித்து ஹூண்டாய் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் அனைத்து மோசமான காலகட்டத்திலும் ஹூண்டாய் துணை நின்றுள்ளது. இன்று கொரோனா 2வது அலை தொற்றுக்களை எதிர்த்துப் போராடி வரும் நிலையில் எங்களது உதவிகளைச் செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications