மும்பை: ஆட்டோமொபைல் துறையில் நீடித்து வரும் வீழ்ச்சியானது இன்று வரை மீள்ச்சியடைந்ததாக தெரியவில்லை. அதை நிரூபிக்கும் விதமாகவே டிசம்பர் மாதத்தில் கார் விற்பனை 10 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இது கடந்த டிசம்பர் மாதத்தில் 10 சதவிகிதம் அதிகரித்து, 37,953 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு காரணம் இந்த நிறுவனம் சந்தையில் வரவிருக்கும் விதிமுறைகளுக்கு ஏற்ப புதிய வாகனங்களை உற்பத்தி செய்து வருவதாகவும், இதனால் இப்படி ஒரு வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
2019ம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த விற்பனையானது 7.2 சதவிகிதம் குறைந்து, 5,10,260 வாகனங்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுவே 2018ம் ஆண்டில் 5,50,002 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதில் 2019ம் காலாண்டர் ஆண்டில் 1,81,200 வாகனங்கள் மட்டும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது முந்தைய ஆண்டில் 1,60,010 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2019ம் ஆண்டு ஆட்டோமொபைல் துறைக்கு மிக சவாலான ஆண்டாகவே இருந்து வருகிறது என்றும் ஹூண்டாய் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 2020ம் ஆண்டில் இது மீள்ச்சியடையலாம் என்றும், ஏனெனில் ஹூண்டாய் நிறுவனம் பிஎஸ் 6 விதிகளுக்கு ஏற்ப தற்போது கார்களை தயாரித்து வருவதாகவும் அறிவித்துள்ளது.
மேலும் தற்போது புதிய விதிகளின் படி தயாரிக்கப்பட்ட நான்கு மீட்டர் விளையாட்டு பயன்பாட்டு வாகனமானது இதுவரை ஒரு லட்சம் யூனிட்களுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெறிவிக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா மட்டும் அல்ல. மற்ற வாகன நிறுவனங்களின் விற்பனையும் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் வரவிருக்கும் மாதங்களில் இந்த மந்த நிலையானது குறைந்து, வாகன விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த நிறுவனங்களின் பங்கு விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதிலும் தற்போது ஹூண்டாய் உள்ளிட்ட பல நிறுவனங்கள் நிலவி வரும் பிரச்சனை தவிர்க்க பல வித சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வழங்கி வருகின்றன. அதிலும் வரவிருக்கும் பொங்கல் பண்டிகை காலத்தில் இந்த விற்பனையானது அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications