சென்னை: ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம் தங்களுடைய உற்பத்தி ஆலைகளில் 100 புதுப்பிக்கத்தக்க மின்னாற்றல் என்ற இலக்கை எட்ட முடிவு செய்துள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி ஆலைகளை நிறுவ இருப்பதாக அறிவித்துள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் இரண்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி ஆலைகளை நிறுவ இருப்பதாக கூறியுள்ளது.
ஃபோர்த் பார்ட்னர் எனர்ஜி லிமிடெட் (Fourth Partner Energy Ltd (FPEL)) நிறுவனத்துடன் ஆற்றல் கொள்முதல் மற்றும் பங்குதாரர் ஒப்பந்தத்தில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் தனது புதுப்பிக்கதக்க ஆற்றல் பயன்பாட்டை அதிகரிப்பதுடன், 2025ம் ஆண்டுக்குள் தனது உற்பத்தி செயல்பாடுகளில் 100 சதவீதம் புதுப்பிக்கதக்க ஆற்றல் பயன்பாட்டை உறுதிப்படுத்துவது என்ற இலக்கை எட்ட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் ஹூண்டாய் நிறுவனத்தின் முதன்மை தயாரிப்பு அதிகாரி கோபாலகிருஷ்ணன் சத்தபுரம் சிவராமகிருஷ்ணன் மற்றும் ஃபோர்த் பார்ட்னர் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்தின் வணிக மேலாண்மை தேசிய தலைவர் கரன் சத்தா ஆகியோர் பங்கேற்று ஒப்பந்தத்தில் கையெடுத்திட்டனர்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தமிழ்நாட்டில் இந்த மின் உற்பத்தி ஆலைகளை நிறுவ 38 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது என முதன்மை தயாரிப்பு அதிகாரி கோபாலகிருஷ்ணன் சத்தபுரம் சிவராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தில் ஹூண்டாய் நிறுவனம் 26 சதவீத பங்குகளையும், ஃபோர்த் பார்ட்னர் எனர்ஜி லிமிடெட் நிறுவனத்துடன் 74 சதவீத பங்குகளையும் கொண்டிருக்கும். இந்த ஒப்பந்தம் மூலம் 25 ஆண்டுகள் புதுப்பிக்கதக்க ஆற்றல் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி ஹூண்டாய் வாகன உற்பத்தி ஆலைகளிலேயே 75 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட சூரிய ஒளி மின் உற்பத்தி ஆலையு, 42.9 மெகாவாட் திறன் கொண்ட காற்றாலை மின் உற்பத்தி ஆலையும் அமைக்கப்பட உள்ளது. ஹூண்டாய் நிறுவனத்துக்கு சொந்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 538 ஏக்கர் பரப்பள்வில் கார் உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. இங்கே ஆண்டுக்கு 8,50,000 கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஹூண்டாய் கூடுதலாக 1500 கோடி ரூபாயை முதலீடு செய்வதற்காக திட்ட அறிக்கையை அண்மையில் சமர்ப்பித்திருந்தது.
சர்வதேச கார்ப்பரேட் புதுப்பிக்கதக்க ஆற்றல் என்ற பெயரில் ஒரு முயற்சி தொடங்கப்பட்டுள்ளது. புவி வெப்பமயமாதலை தடுக்கவும் சுற்றூசூழலை பாதுகாக்கவும் 100 சதவீதம் புதுப்பிக்க தக்க ஆற்றலை உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்த வேண்டும் என்பதே இந்த முயற்சியின் இலக்காகும். ஹூண்டாய் நிறுவனமும் இந்த முயற்சியில் இணைந்திருக்கும் நிறுவனங்களில் ஒன்றாகும்.
Written by: Devika


Click it and Unblock the Notifications