அண்மை காலமாக இந்தியாவில் மின்சார வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெட்ரோல் டீசல் விலை உயர்வு மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாற வேண்டும் என அரசும் மக்கள் மின்சார வாகனங்களை வாங்க ஊக்குவிக்கிறது.
தற்போது சர்வதேச அளவில் மின்சார வாகனங்களுக்கான சந்தையாக இந்தியா மாறி இருக்கிறது. மின்சார இரு சக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் என பல வாகன தயாரிப்பு நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு மின்சார வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றன.

இந்த போட்டியில் தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இறங்கியுள்ளது. ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா என்ற பெயரில் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் பெரிய அளவில் மின்சார வாகனங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக பேட்டரி செல்களை தயாரிக்கும் ஒப்பந்தத்தை எக்சைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் எக்சைட் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் துணை நிறுவனமான எக்சைட் எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தோடு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இதன்படி ஹுண்டாய் மோட்டார் நிறுவனத்தில் தயாரிக்கப்படக்கூடிய மின்சார வாகனங்களுக்கு தேவையான லித்தியம் செல்கள் மற்றும் பேட்டரி பேக்குகளை எக்சைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தயாரித்து வழங்க இருக்கிறது. எனவே ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இந்தியாவில் தீவிரமாக மின்சார வாகன உற்பத்தியில் இறங்க இருப்பது இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை அன்று ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் இந்த தகவலை பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பிடம் ஆவணமாக தாக்கல் செய்தது. இதன் மூலம் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பேட்டரி செல்களை தங்களுடைய மின்சார வாகனத்தில் பயன்படுத்தும் முதல் இந்திய நிறுவனம் என்று பெருமை ஹூண்டாய் மோட்டார் இந்தியாவுக்கு கிடைக்க இருக்கிறது.
இவ்வாறு உள்நாட்டிலேயே மின்சார வாகனங்களுக்கான பேட்டரி செல்களை தயாரித்து பயன்படுத்துவதால் ஹூண்டாய் நிறுவனத்தின் மின்சார வாகனங்களின் விலை மற்ற நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது குறைவாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
ஹூண்டாய் நிறுவனம் பல்வேறு மின்சார கார்களை இந்திய சந்தையில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதற்கான பேட்டரி தயாரிப்பை தான் தற்போது எக்சைட் எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற இருக்கிறது.
வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை தாண்டி இந்தியா தான் ஹூண்டாய் நிறுவனத்தின் மிகப்பெரிய சந்தையாக இருக்கிறது . இந்தியாவில் தற்போது ஹூண்டாய் நிறுவனம் Hyundai IONIQ 5 என்ற மின்சார காரை விற்பனை செய்கிறது. இதன் விலை சுமார் 46 லட்சம் ரூபாய் ஆகும்.
Story Written by: Devika
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications