தமிழ்நாட்டில் ஹூண்டாயின் மெகா திட்டம்!! ரூ.45,000 கோடி முதலீட்டுடன் களமிறங்க தயார்!!

முன்னணி வாகன உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான ஹூண்டாய் மோட்டார் இந்தியாவில் 2030 ஆம் ஆண்டுக்குள் கூடுதலாக 45,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்த 45 ஆயிரம் கோடி ரூபாயில் பெரும்பாலான தொகை தமிழ்நாட்டை நோக்கி வர இருப்பது தான் தமிழ்நாடு மக்களுக்கான நற்செய்தி.

ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜோஸ் முன்னாஸ் மும்பையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கு இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும் , என்னென்ன திட்டங்கள் தீட்டப்பட்டு இருக்கின்றன , எவ்வளவு முதலீடு செய்யப் போகிறோம் என்பன உள்ளிட்ட விவரங்களை தெளிவாக வெளியிட்டார்.

தமிழ்நாட்டில் ஹூண்டாயின் மெகா திட்டம்!! ரூ.45,000 கோடி முதலீட்டுடன் களமிறங்க தயார்!!

இந்தியாவில் 2030ஆம் ஆண்டுக்குள் 5 பில்லியன் டாலர்கள் அதாவது 45,000 கோடி ரூபாயை முதலீடு செய்யப் போகிறோம் என தெரிவித்தார். இந்த 45 ,000 கோடி என்பது ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கக்கூடிய தங்களுடைய உற்பத்தி ஆலைகளை விரிவாக்கம் செய்வது, புதிய தயாரிப்புகளை கொண்டு வருவது மற்றும் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு என ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கூறியிருக்கிறார் .

1996 ஆம் ஆண்டு தான் தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் இந்திய சந்தையில் கால் பதித்தது . சென்னையில் இருங்காட்டு கோட்டையில் தன்னுடைய முதல் உற்பத்தி ஆலையை நிறுவியது. தற்போது சென்னையில் இருங்காட்டு கோட்டை மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் மிகப்பெரிய ஆலைகளை செயல்படுத்தி வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் 6 மில்லியன் டாலர்களை இதுவரை முதலீடு செய்திருக்கிறது.

தற்போது அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் 5 மில்லியன் டாலர்களை முதலீடு செய்ய இருப்பதாகவும் முதன்முறையாக 5 ஆண்டு காலத்திற்கான மூலதன செலவின திட்டங்களையும் ஹூண்டாய் நிறுவனம் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறது. இந்தியா தான் தங்களுடைய அடுத்த இலக்கு என தெரிவித்திருக்கும் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் நாங்கள் வலுவாக இருக்கிறோம் என்றால் உலக அளவில் நாங்கள் வலுவாக இருக்கிறோம் என அர்த்தம் என தெரிவித்துள்ளது.

தற்போது ஹூண்டாய் நிறுவனம் முதலீடு செய்வதாக அறிவித்து இருக்கக்கூடிய இந்த 45,000 கோடி தொகையில் 60% புதிய கார்கள் தயாரிப்பு மற்றும் ஆய்வு மேம்பாட்டு பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்படுமாம். மீதமுள்ள 40% தொகை என்பது ஏற்கனவே இருக்கக்கூடிய ஆலைகளை விரிவாக்கம் செய்வதற்கு பயன்படுத்தப்படும்.

இந்தியாவின் பொறியியல் திறமை, போட்டி தன்மை, அதிகரிக்கும் தேவை உள்ளிடவை தங்கள் நிறுவனத்திற்கு மிகப்பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தந்திருக்கின்றன என நிறுவனம் கூறுகிறது. டாடா மோட்டார்ஸ் மற்றும் மகேந்திரா போன்ற உள்நாட்டு நிறுவனங்களோடு ஏற்பட்டுள்ள போட்டி காரணமாக ஹூண்டாய் இந்தியா நிறுவனத்தின் சந்தை பங்கு என்பது இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 14 சதவீதம் குறைந்து இருக்கிறது. எனவே அதனை அதிகப்படுத்துவதற்காக தான் ஹூண்டாய் நிறுவனம் இந்தியாவில் அதிக கவனம் செலுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

2030ஆம் ஆண்டுக்குள் தங்கள் விற்பனை செய்யக்கூடிய 55 சதவீத வாகனங்கள் மின்சார வாகனங்களாக இருக்கும் என இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறது . அந்த வகையில் இந்திய சந்தையில் அதிக அளவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்து விற்பனை செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் தான் அதன் மிகப்பெரிய ஆலை அமைந்திருக்கிறது ஸ்ரீபெரும்புதூரில் அமைந்திருக்கக்கூடிய ஹூண்டாய் நிறுவனத்தின் ஆலையில் ஓர் ஆண்டுக்கு 8 லட்சத்து 24 ஆயிரம் கார்கள் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கிறது . அண்மையில் தான் இந்த நிறுவனம் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து மகாராஷ்டிராவில் இருக்கும் ஒரு ஆலையை வாங்கியது. ஆனால் இன்னும் அங்கே உற்பத்தி தொடங்கவில்லை.

எனவே இந்த அறிவிப்பின் மூலம் ஹூண்டாய் நிறுவனம் தங்களுடைய புதிய தயாரிப்புகளையும் ஆலை விரிவாக்கத்தையும் மேற்கொள்ள தமிழ்நாட்டில் தான் பெரிய அளவிலான முதலீட்டை திருப்பி கவனம் செலுத்த உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+