இந்தியாவில் சொகுசு கார் மார்க்கெட் கணிசமாக வளர்ந்து விட்டது. மெர்சிடஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, லேண்டு ரோவர் போன்ற பிராண்டு கார்கள் கடந்த சில ஆண்டுகளாக மிக அதிக அளவில் தனது கார்களை விற்றுள்ளது.
சொகுசு கார்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில் ஹூண்டாய் நிறுவனம் தனது பிரீமியம் பிராண்டான ஜெனிசிஸ்ஸை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. ஜெனிசிஸ் காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்காக ஹூண்டாய் நிறுவனம் ஒரு புதிய டீமை உருவாக்கி இந்தியாவில் ஜெனிசிஸ் பிராண்டை விற்பனை செய்ய உருவாக்கியுள்ளது. எஸ்யூவி கார்களுக்கு அதிக டிமாண்ட்இருப்பதால் ஜெனிசிஸ் இந்தியாவில் எஸ்யூவிக்களை அதிகளவில் விற்க திட்டமிட்டுள்ளது.
மக்களின் வரவேற்பை அறிவதற்காக இந்த மாடல்கள் முதலில் சிபியூக்களாக அறிமுகப்படுத்தப்படும். பின்னர் சென்னையில் உள்ள ஹூண்டாய் ஆலையில் எஸ்யூவிக்கள் அசெம்பிள் செய்யப்படும். இப்போது ஜெனிசிஸ் பிராண்டு 3 எஸ்யூவிக்களைக் கொண்டுள்ளது.
முதலில் ஜிவி70 மாடல் 2020இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிபி70 மாடல் மெர்சிடஸ்ஸின் ஜிஎல்சி மற்றும் ஆடி க்யூ5 கார்களுடன் போட்டியிடுகிறது.
இரண்டாவது மாடல் ஜிவி80ம் 2020இல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஜிவி80 மாடல் மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்இ மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார்களுடன் போட்டியிடுகிறது.
ஜெனிசிஸ் பிராண்டு இப்போது ஜிவி90 மாடல் காரை உலகம் முழுவதும் அறிமுகப்படுத்துவதற்கு தயாராகி வருகிறது. ஜிவி90 கார் ஜெனிசிஸ்ஸின் பிரதான மாடலாக விளங்கும். மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் மற்றும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 மாடல்களுக்குப் போட்டியாக இருக்கும்
இந்தியாவில் ஜெனிசிஸ் பிராண்டை அறிமுகப்படுத்துவது குறித்து ஹூண்டாய் சில காலமாகவே கூறிவருகிறது.
கடந்த ஆண்டு, ஹூண்டாய் மோட்டார் இந்தியாவின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அன்சூ கிம், ஜெனிசிஸ் பிராண்டை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதில் நிறுவனம் தயங்காது என்று தெரிவித்தார்.
அதை இந்தியாவுக்கு எப்போது கொண்டுவருவது என்பது தான் பிரச்னை என்றும் அவர் கூறினார். இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்காக மாநில தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பயன்படுத்துவதற்காக 68 ஜெனிசிஸ் கார்களை ஹூண்டாய் நிறுவனம் கொண்டு வந்தது.
Story written by: I.jayachandran
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications