ஆட்டோமொபைல் துறையை ஆட்டிப்படைத்து வரும் மந்த நிலையில், முன்னணி வாகன நிறுவனங்கள் பெரும்பாலும் சரிவையே சந்தித்து வருகின்றன.
இதன் எதிரொலியாக தொடர்ந்து விற்பனை ஒரு புறம் சரிந்து வருகிறது. மறுபுறம் பல ஆயிரம் பேர் வேலையையும் இழந்து வருகின்றனர்.
இத்தகைய கடுமையான சூழ்நிலையிலும் கூட, தென் கொரியாவைச் சேர்ந்த மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான ஹூண்டாய் நிறுவனம், இந்த கடுமையான மந்த நிலையிலும் கூட விற்பனை அதிகரித்துள்ளது.
விற்பனை அதிகரிப்பு
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிறுவனம், கடந்த ஞாயிற்று கிழமையன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, கடந்த நவம்பர் மாதத்தில் விற்பனை 7.2 சதவிகிதம் அதிகரித்து, 60,500 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 56,411 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் ஹூண்டாய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஏற்றுமதியும் அதிகரிப்பு
இதே உள்நாட்டு விற்பனை 2 சதவிகிதம் அதிகரித்து 44,600 யூனிட்கள் விற்[பனை செய்துள்ளதாகவும், இது கடந்த நவம்பர் 2018ல் 43,709 யூனிட்களாக விற்பனை செய்திருந்ததாகவும் தெரிவித்துள்ளது. இதே ஏற்றுமதி கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது 25.2 சதவிகிதம் அதிகரித்து, 15,900 யூனிட்கள் ஏற்றுமதி செய்துள்ளதாகவும், இதுவே இதற்கு முந்தைய ஆண்டில் 12,702 யூனிட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.
பயணிகள் வாகனத்தில் வீழ்ச்சி தான்
நாட்டின் இரண்டாவது பெரிய பயணிகள் வாகன விற்பனையாளரான ஹூண்டாய், நவம்பரில் 2.2 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 63,610 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாகவும், இதுவே கடந்த ஆண்டு இதே காலாண்டில் 65,020 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதுவே கடந்த அக்டோபரிலும் வாகன விற்பனை 3.8 சதவிகிதம் குறைந்து 50,010 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்திருந்தது. இதுவே அக்டோபர் 2018ல் 52,001 யூனிட்கள் விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹிமாலய சாதனை தான்
இதுவே இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி நிறுவனம் விற்பனை சரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக பயணிகள் வாகன விற்பனையானது கடந்த நவம்பரில் 3.3 சதவிகிதம் விற்பனை சரிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது தான் இப்படி எனில் மற்ற நிறுவனங்களும் பெரும் சரிவைக் சந்தித்துள்ளன. எனினும் இவற்றோடு ஒப்பிடும்போது ஹூண்டாய் நிறுவனம் விற்பனையை அதிகரித்திருப்பது ஹிமாலய சாதனை தான்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications