பலத்த அடி வாங்கிய ஹூண்டாய் மோட்டார்ஸ்.. மஹிந்திராவும் அப்படி தான்..!

டெல்லி: தொடர்ந்து பல மாதங்களாக அடி வாங்கி வரும் வாகனத் துறையானது கடந்த பிப்ரவரி மாதத்திலும் வீழ்ச்சி தான் கண்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி மாதத்திலும் வீழ்ச்சியைத் தான் பதிவு செய்துள்ளன. ஹூண்டாய் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதன் விற்பனை 10.3 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனை 10.3 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 48,910 யூனிட்கள் மட்டும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஹூண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பலத்த அடி வாங்கிய ஹூண்டாய் மோட்டார்ஸ்.. மஹிந்திராவும் அப்படி தான்..!

இதே முந்தைய ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 54,518 வாகனங்களை ஹூண்டாய் விற்பனை செய்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதே உள்நாட்டு விற்பனையானது 7.2 சதவிகிதம் குறைந்து 40,010 யூனிட்களாக குறைந்துள்ளது. இதுவே முந்தைய ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 43,110 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

விற்பனை குறைந்துள்ள அதே நேரத்தில் ஏற்றுமதி 22% வீழ்ச்சி கண்டு, 8,900 யூனிட்கள் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே மாதத்தில் 11,408 யூனிட்கள் ஏற்றுமதி செய்திருந்ததாகவும் ஹூண்டாய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மாருதி சுசூகி மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் தான் இப்படி வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது எனில், மறுபுறம் இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான மகேந்திரா நிறுவனம் தனது வாகன விற்பனை பிப்ரவரி மாதத்தில் 58 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது மொத்த வாகன விற்பனையானது 42 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும், இதே பயணிகள் வாகன விற்பனையானது 58 சதவிகிதம் வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

மொத்த வாகன விற்பனையானது 42 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 32,476 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இதே முந்தைய ஆண்டு பிப்ரவரி 2019-ல் 56,005 வாகனங்களை உற்பத்தி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே உள்நாட்டு வாகன விற்பனையானது 30,637 ஆக குறைந்துள்ளதாகவும், இதே பிப்ரவரி 2019ல் 52,915 ஆக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. இதே பயணிகள் வாகன விற்பனை பிரிவில் (பயன்பாட்டு வாகனங்கள், கார்கள், வேன்கள் உட்பட) 10,938 வாகனங்களை விற்பனை செய்துள்ளதாகவும், இதே முந்தைய ஆண்டு 2019 பிப்ரவரியில் 26,109 வாகனங்கள் விற்பனை செய்திருந்ததாகவும் பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதே நடுத்தர மற்றும் இலகுரக, கனரக வாகன விற்பனையானது 436 தான் என்றும், இதுவே 2019 பிப்ரவரியில் 686 வாகனங்களாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதே போல் ஏற்றுமதியும் 40% சுருங்கி 1,839 ஆக குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+