2023 ஆம் ஆண்டில் அதிகபட்ச கார் விற்பனையை ஹூண்டாய் மோட்டார் இந்தியா செய்து வரலாற்று சாதனையை படைத்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஹூண்டாய் நிறுவனம் 6,02,111 கார்களை விற்றுள்ளது. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 9 சதவீதம் அதிகமாகும்.
இதன் மூலம் 6 லட்சம் வாகனங்கள் என் மைல்கல்-ஐ ஹூண்டாய் தொட்டு உள்ளது. 2022 ஆம் ஆண்டில் 5,52,511 கார்களை ஹூண்டாய் நிறுவனம் விற்றிருந்தது. அத்துடன் 2023 ஹூண்டாய் நிறுவனத்தின் வெளிநாட்டு ஏற்றுமதியும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

2023 ஆம் ஆண்டில் 1,63,675 கார்களை ஹூண்டாய் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ளது. இது முந்தை ஆண்டில் விற்கப்பட்ட 1,48,300 கார்களை விட அதிகமாகும். டிசம்பர் 2023இல் மட்டும் 56,450 கார்களை இந்தியாவில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் விற்றுள்ளது. 13,700 கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.
தொழில் வளர்ச்சியோடு இணைந்திருந்தது மட்டுமல்லாமல் 8.2 சதவீதம் உற்பத்தி அதிகரித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனக் கார்களை மக்கள் விரும்பி வாங்குகின்றனர் என்பதற்கு இதுவே அத்தாட்சியாகும் என்று ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தருண் கார்க் கூறியுள்ளார்.
வாடிக்கையாளர்களின் தேவை அதிகரித்ததால் 2023 ஆம் ஆண்டில் 50,000 கார்களை கூடுதலாக உற்பத்தி செய்யும் திறனை அதிகரித்தோம் என்றும் அவர் கூறினார். தற்போது 1366 சேல்ஸ் பாயிண்டுகள், 1548 சர்வீஸ் பாயிண்டுகளை ஹூண்டாய் நிறுவனம் இயக்கி வருகிறது.
ஹூண்டாய் நிறுவனம் 13 மாடல்களைத் தயாரித்து வருகிறது. அவை: Grand i10 NIOS, i20, i20 N-Line, AURA, EXTER, VENUE, VENUE N-Line, VERNA, CRETA, ALCAZAR, TUCSON, KONA Electric, SUV IONIQ 5.
சென்னை அருகே அமைந்துள்ள உற்பத்தி நிலையத்தில் இருந்து தரமான கார்களை தயாரித்து விற்கிறது.
மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆசியா பசிபிக் உள்ளிட்ட பகுதிகளின் 88 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனிடையே ஹூண்டாய் மோட்டார் நிறுவனக் கார்கள் விலை இப்போது அதிகரித்துள்ளது.
தயாரிப்பு செலவுகள், மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பு போன்ற காரணத்தினால் கார்கள் விலை ஏற்றப்படும் என டிசம்பரில் ஹூண்டாய் அறிவித்திருந்தது. இருப்பினும் இனி வரும் காலத்தில் வாடிக்கையாளர்களை பாதிக்காதவாறு காரின் விலையை நிலையாக வைத்திருக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications