டைம் டிராவல் செய்த ஜான் டிட்டர்.. என்னவெல்லாம் சொல்லியிருக்கார் தெரியுமா? ஷாக் மேல் ஷாக்

டைம் டிராவல் பற்றி உலகெங்கும் பல திரைப்படங்களும் கதைகளும் நாவல்களும் எழுதப்பட்டிருக்கின்றன. அறிவியல்பூர்வமாக சற்று கடினமாக இருந்தாலும் காலப்பயணத்தின் விளக்கம் நோக்கமும் என்னவென்பதை பல்லாண்டுகளாக மனிதர்களிடையே பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில், 2000 ஆண்டில் ஒரு நாள், ஒருவரை பற்றிய விவாதங்கள் இணையத்தை நிறைத்துக் கொண்டிருந்தன. அவர் பெயர்தான் ஜான் டிட்டர்.

2036 ஆம் ஆண்டின் வரை சென்று வந்த முதல் டைம் டிராவலர் என்று தன்னைத்தானே அறிவித்துக் கொண்ட ஜான் டிட்டர், எதிர்கால பேரழிவுகள் பற்றிய கணிப்புகளை பகிர்ந்துகொண்டார்,.

டைம் டிராவல் செய்த ஜான் டிட்டர்.. என்னவெல்லாம் சொல்லியிருக்கார் தெரியுமா? ஷாக் மேல் ஷாக்

முதன்முதலில் கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி இணையத்தில் ஃபோரம் வழியாக வந்த ஜான் டிட்டர், வணக்கம். நான் ஒரு காலப்பயணி. 2036ஆம் ஆண்டிலிருந்து வருகிறேன். தான் புளோரிடாவைச் சேர்ந்தவன் என்றும், ராணுவத்தில் பணியாற்றியவன் என்றும் கூறினார். 1975ஆம் ஆண்டுக்கு சென்று IBM 5100 கணினியை பெற்றுக் கொண்டு திரும்ப என் காலத்துக்கு சென்று கொண்டிருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும் எதிர்கால அச்சுறுத்தல்கள் பற்றிய பல்வேறு கணிப்புகள் குறித்தும் பதிவிட்டிருந்தார். அதில், வரவிருக்கும் அணுசக்தி மோதல், சர்வாதிகார ஆட்சிகள் மற்றும் உலகளாவிய பேரழிவுகள் குறித்து அவர் எச்சரித்தார். அவரது சில கணிப்புகள் மிகவும் துல்லியமாக இருந்தன.

உதாரணமாக, அவர் 2003ம் ஆண்டு ஈராக் போர் குறித்தும் போருக்கு முன்பே, நாட்டில் பேரழிவு ஆயுதங்கள் இருப்பது குறித்தும் முன்பே அறிவித்தார். தொழில்நுட்பம் பற்றிய ஆச்சரியமான நுண்ணறிவுகளையும் டிட்டர் பகிர்ந்து கொண்டார். அவரது மிகவும் குறிப்பிடத்தக்க கணிப்புகளில் ஒன்று, மறைக்கப்பட்ட அம்சத்தைக் கொண்ட ஒரு கணினியான ஐபிஎம் 5100 பற்றியது.

இந்த சக்திவாய்ந்த கணினியை, நியூயார்க் அர்மாங்க் நகரை தலைமையிடமாக கொண்ட, ஐபிஎம் (IBM) என்றழைக்கப்படும் "இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன்" (International Business Machines Corporation) பன்னாட்டு கணினியியல் நிறுவனம் 2004ம் ஆண்டில் அறிமுகம் செய்தது.

இருப்பினும், இதன் ரகசிய செயல்பாடுகளை இந்த நிறுவனம் மறைத்து வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.ஜான் டிட்டர், அந்த ரகசியம் குறித்து சொல்லவேண்டுமென்றால், 21 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியை கடுமையாக விமர்சித்திருந்தார். எதிர்காலத்தில் யாரும் உங்களை விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் இந்த சகாப்தம் முற்றிலும் சோம்பேறி, சுயநலம் கொண்ட மக்கள் வாழ்ந்த காலமாதான் எதிர்காலத்தில் இருப்பவர்கள் இந்த காலகட்டத்தை பார்ப்பார்கள் என்று கூறியிருந்தார். ஆனால் அவரது சில கணிப்புகள் உண்மையாகிவிட்ட போதிலும், டிட்டர் கூறிய அனைத்தும் நிறைவேறவில்லை.

இதேபோல், விண்வெளியில் விமானம் அதிக வெப்பமடையும் பிரச்சினையை மனிதர்களால் எவ்வாறு தீர்க்க முடிந்தது என்றும் டிட்டர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பலர், கொலம்பியாவின் விண்வெளி விண்கல விபத்தைப் பற்றி டிட்டர் குறிப்பிடுவதாக கருத்து கூறினர். மேலும் பிரபல விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா இறந்த விமான பயணத்தின் விளைவையும் டிட்டர் அறிந்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.

2004 ஆம் ஆண்டுக்குள் அமெரிக்காவில் உள்நாட்டுப் போர், உலகளவில் மாடுகளிடையே போவைன் ஸ்பாஞ்சிஃபார்ம் என்செபலோபதி (mad cow disease)என்ற நோய் தொற்று பரவும், மற்றும் ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படும் உள்ளிட்ட சில கணிப்புகளை கணித்திருந்தார். ஆனால், இந்த நிகழ்வுகள் நிகழாமல் போனது. இவரது கணிப்புகள் தவறானவை என்று நிரூபிக்கப்பட்டன. இருப்பினும், அவரது எச்சரிக்கைகள் இந்த நிகழ்வுகளைத் தடுத்ததாக பலர் கூறுகின்றனர்.

இதையடுத்து, இணையத்திலிருந்து திடீரென மறைந்த பிறகு, ஜான் டிட்டர் தெரிவித்த தகவல்கள் மக்களிடையே பெரும் விவாதமாக மாறியது. அப்போது, புளோரிடாவைச் சேர்ந்த Larry மற்றும் John Rick Haber என்ற சகோதரர்கள் இந்த புராணக்கதைக்குப் பின்னால் இருப்பதாக சிலர் நம்புகிறார்கள். இருப்பினும், அவர் உண்மையிலேயே எதிர்காலத்தைச் சேர்ந்தவரா அல்லது அவர் பொய்களை கூறினாரா என்று பல்வேறு விவாத கருத்துக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+