விஜய் மல்லையா என்றாலே அனைவருக்கும் கிங்ஃபிஷர் நிறுவனம்தான் நினைவில் வரும். இந்தியாவில் வங்கிகளிடம் கடன் வாங்கிவிட்டு திரும்ப செலுத்தவில்லை என்ற மோசடி குற்றச்சாட்டுக்கு ஆளானவர் தான் விஜய் மல்லையா .தற்போது அவர் மீது இந்தியாவில் பல்வேறு வழக்குகள் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.
டிரெண்டாகும் விஜய் மல்லையா: தற்போது லண்டனில் வசித்து வரக்கூடிய விஜய் மல்லையா கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டு காலத்திற்குப் பிறகு தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்தும் கிங்ஃபிஷர் நிறுவனத்தின் வீழ்ச்சி குறித்தும் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பேசி இருக்கிறார். அவருடைய இந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் தற்போது அனைவராலும் பகிரப்படும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது, நாட்டை விட்டு தப்பி சென்ற பிறகு முதன்முறையாக அவர் அளித்துள்ள ஒரு விரிவான பேட்டியாக இந்த பாட்கேஸ்ட் பார்க்கப்படுகிறது.

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ஏன் வீழ்ந்தது: 2008 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் ஏற்பட்ட நிதி நெருக்கடியே கிங்பிஷர் ஏர்லைன்ஸ் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது என அவர் தெரிவித்திருக்கிறார். 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகளாவிய நிதி நெருக்கடி இந்தியாவையும் பாதித்தது என குறிப்பிட்டு இருக்கு அவர் இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது என்னால் தொடர்ச்சியாக கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை நடத்த முடியவில்லை என சுட்டிக்காட்டி இருக்கிறார்.
பிரணாப் முகர்ஜியுடன் சந்திப்பு: சர்வதேச அளவில் பொருளாதார சூழல்கள் மோசமடைந்து வருவதை கண்டு அச்சமடைந்த நான் அப்போது நிதி அமைச்சராக இருந்த பிரணாஒ முகர்ஜியை சந்தித்தேன் எனக் கூறியிருக்கிறார். எனக்கு இருக்கும் பொருளாதார பிரச்சனைகளை குறித்து நான் கூறினேன். கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விமானங்களின் எண்ணிக்கை குறைக்க வேண்டும், ஊழியர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும், இப்படிப்பட்ட மந்தமான பொருளாதார சூழலில் என்னால் செயல்பட முடியாது என நான் பிரணாப் முகர்ஜியிடம் கூறினேன், ஆனால் அவர் அதற்கு ஊழியர்களை குறைக்க வேண்டாம் வங்கிகளிடமிருந்து உங்களுக்கு அனைத்து வகையான உதவிகளும் கிடைக்கும் என வாக்குறுதி அளித்தார் என்று தெரிவித்திருக்கிறார்.
ஊழியர்களிடம் மன்னிப்பு கேட்ட மல்லையா: அதன் பின்னர் தான் கடன் பிரச்சினைகள் தொடங்கின என தெரிவித்து இருக்கிறார். நிதி நெருக்கடி அதிகரிக்கவே கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் தன்னுடைய அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்ய வேண்டிய சூழலுக்கு ஆளானது, கடன் வாங்கிய சமயத்தில் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சரியாக செயல்படாமல் போனது என தெரிவிக்கிறார். தன் நிறுவனம் திடீரென மூடபட்டதால் பல ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்கப்படவில்லை என கூறி இருக்கும் விஜய் மல்லையா என்னுடைய நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.
ஊழியர்களுக்கு சம்பளமாக வழங்குவதற்காக வைத்திருந்த பணத்தை வங்கிகள் முடக்கி விட்டன என்றும் இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடினேன், ஊழியர்களுக்கான சம்பளம் கொடுப்பதற்கு அந்த பணத்தை விடுவிக்குமாறு கூறினேன் ஆனால் வங்கிகளும் நீதிமன்றமும் அவற்றை நிராகரித்து விட்டன என தெரிவித்திருக்கிறார்.
நான் திருடன் இல்லை: பெரும்பாலானவர்கள் என்னை ஒரு திருடன் என கூறுகின்றனர்.2016 ஆம் ஆண்டு மார்ச்சுக்கு பிறகு நான் இந்தியாவிற்கு வரவில்லை , என்னை தப்பி ஓடியவன் எனக் கூறுங்கள் ஆனால் நான் திருடன் அல்ல என தெரிவித்திருக்கிறார். நான் இந்தியாவை விட்டு ஓடி போகவில்லை நான் ஏற்கனவே திட்டமிட்ட ஒரு பயணமாக தான் இந்தியாவில் இருந்து வெளியேறினேன், அந்த சமயத்தில் இந்த பிரச்சனைகள் எல்லாம் நடந்தது அதனால் நான் மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என நினைக்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.
வாங்கிய கடனை விட கூடுதலாக செலுத்திவிட்டேன்: நான் கொடுக்க வேண்டிய பணம் 6200 கோடி ரூபாய் தான் ஆனால் அதைவிட கூடுதலான தொகையை வங்கிகள் என் சொத்துகளை விற்று பெற்றுக் கொண்டு விட்டன என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். மீண்டும் இந்தியாவிற்கு திரும்ப வருவீர்களா என்ற கேள்விக்கு இந்தியாவில் நியாயமான விசாரணை நடத்தப்படுவதற்கான உத்தரவாதம் நான் கண்ணியமாக நடத்தப்படுவதற்கான உத்தரவாதம் இருந்தால் வருவேன் ஆனால் அப்படி இருக்கும் என எனக்கு தோன்றவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
கிட்டத்தட்ட நான்கு மணி நேரங்களுக்கு இந்த பாட்காஸ்ட் நிகழ்ச்சி செல்கிறது. சமூக வலைதளத்தில் இதுதான் தற்போது டிரெண்டிங்காக இருக்கிறது. மல்லையாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்களுடைய பதிவுகளை வெளியிட்ட வண்ணம் இருக்கின்றனர். ஒரு பயனர் மிகச் சிறந்த ஒரு பாட்காஸ்ட் இது என குறிப்பிட்டு இருக்கிறார் . ஒரு பயனர் கடவுள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் நிச்சயம் நீங்கள் ஒருநாள் இந்தியாவிற்கு திரும்ப வருவீர்கள் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். அதே வேளையில் மல்லையாவை திட்டியும் சிலர் பதிவிட்டுள்ளனர்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications