பெங்களூரு: நான் இதுவரை பங்குச்சந்தையில் முதலீடு செய்ததில்லை என ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஓலா சங்கல்ப் 2024 நிகழ்ச்சியில் ஓலா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான பாவிஷ் அகர்வால் கலந்து கொண்டு பேசினார்.
ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் , செயற்கை நுண்ணறிவு நிறுவனம் குர்ட்ரிம் ஆகியவற்றின் வருங்கால திட்டங்கள் குறித்து பாவிஷ் அகர்வால் பல்வேறு தகவல்களை வெளியிட்டார். அப்போது கூகுள் போன்ற பெரிய தொழில் நுட்ப நிறுவனங்களின் டேட்டா காலனித்துவம் பிரச்சனைகளில் இருந்து இந்திய நிறுவனங்களை காப்பாற்றுவதற்காகவே குர்ட்ரிம் என்ற செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்கியதாக அவர் தெரிவித்தார்.

டெஸ்லா நிறுவனமும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனமும் ஒன்று கிடையாது என குறிப்பிட்ட அவர் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சர்வதேச அளவில் மிக முக்கியமான ஒரு மின்சார வாகன நிறுவனமாக மாறும் என நம்பிக்கை தெரிவித்தார்.
தன்னுடைய செல்வ வளம் குறித்து குறிப்பிட்டு பேசிய பாவிஷ் அகர்வால் தான் இதுவரை பங்குச்சந்தையில் முதலீடு செய்ததில்லை எனக் கூறினார். அவரும் அவரது மனைவியும் எப்பொழுதும் சேமிப்பு கணக்கு மற்றும் ஃபிக்சட் டெபாசிட்களிலேயே பணத்தை வைத்துக் கொள்வோம் என கூறினார்.
ஓலா எலக்ட்ரிட் ஐபிஓ வெளியீடு செய்து பொது நிறுவனமாக மாறியுள்ளது. இதன் மூலம் தனக்கு இன்னும் பொறுப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மின்சார வாகன சந்தையில் இந்தியாவை தலைவராக மாற்ற வேண்டும் என்பதே ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் நோக்கம் என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் மின்சார வாகனம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகிய இரண்டு துறைகளிலும் இந்தியா முன்னணியில் நிற்க வேண்டும் என்பதற்காகவே ஓலா இந்த இரண்டு துறைகளிலும் மிகத் தீவிரமாக கவனம் செலுத்துகிறது என கூறினார்.
பாவிஷ் அகர்வாலை பொறுத்தவரை ஓலா எலக்டிரிக் ஐபிஓவிற்கு பிறகு அவரது சொத்து மதிப்பு கணிசமான அளவு உயர்ந்து இருக்கிறது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஆகஸ்ட் 2ஆம் தேதி ஐபிஓ வெளியீடு செய்தது. இதனை அடுத்து ஆகஸ்ட் 9ஆம் தேதி இது பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. அப்போது முதல் இந்த நிறுவனத்தில் ஒரு பங்கு மதிப்பு 107 சதவிகிதம் என உயர்ந்தது.
அதாவது 76 ரூபாய்க்கு முதலில் பட்டியலிடப்பட்டு அதன் மதிப்பு தற்போது 157 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. பங்கு மதிப்பு தொடர்ந்து உயர்வதன் மூலம் பாவிஷ் அகர்வாலின் சொத்து மதிப்பும் 20,000 கோடி ரூபாய் என்ற அளவில் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications