இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரம் இந்தியாவின் ஐடி தலைநகரம் என பெயர் பெற்ற பெங்களூரு நகரத்திற்கு போக்குவரத்து நெரிசலுக்கான தலைநகரம் என்ற பெயரும் மிகப் பொருத்தமானதாக தான் இருக்கும்.
பெங்களூரு என்றாலே பலரது நினைவுக்கு முதலில் வருவது அங்கு நிலவக்கூடிய டிராபிக் தான். பெங்களூரு டிராபிக்கில் சிக்கி கொண்டு வேலைக்கு சென்று வருவது அந்த நகர மக்களுக்கு பெரும் நாள்தோறும் பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது. பெங்களூருவில் பல்வேறு ஐடி நிறுவனங்கள் செயல்படுகின்றன பல்வேறு ஜிசிசி மையங்கள் செயல்படுகின்றன . இதன் காரணமாக வேலை நிமித்தமாகவும் படிப்பு நோக்கத்திற்காகவும் பெங்களூருக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகம் ஆனால் அதற்கேற்ற வகையில் அங்கே சாலை உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை.

அரசு ஒருபுறம் மெட்ரோ உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தாலும் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை தீர்க்க முடியவே இல்லை. அந்த அளவிற்கு வாகனங்களும் பெருகி மக்கள் தொகையும் பெருகிப் போய் காணப்படுகிறது . இந்த நிலையில் பெங்களூரு டிராபிக் ஜாமில் சிக்கி ஒரு ஆண்டில் தான் இரண்டரை மாதங்களை இழந்திருப்பதாக ஒரு நபர் தெரிவித்திருப்பது வைரலாக மாறியிருக்கிறது.
ஜேபி நகரில் வசிக்கக்கூடிய ஒரு நபர் வெளியிட்டு இருக்கக்கூடிய சமூக வலைதள பதிவில் தன்னுடைய வீட்டிலிருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் அலுவலகம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த 14 கிலோமீட்டரை வழக்கமாக அரை மணி நேரத்தில் கடந்து விடலாம் ஆனால் பெங்களூரு போக்குவரத்து நெரிசலில் தினம் தோறும் 90 நிமிடங்கள் நான் பயணம் செய்கிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார் .
அதாவது வழக்கமான பயண நேரத்தை விட மூன்று மடங்கு அதிகமான நேரத்தை நான் பயணத்திலேயே செலவிடுகிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார். ஆண்டுக்கு 28 லட்சம் ரூபாய் சம்பாதிக்கிறேன் அதில் 6.5 லட்சம் ரூபாய் வருமான வரி ஆகவும் 1. 4 லட்சம் ரூபாயை ஜிஎஸ்டி ஆகவும் கொடுக்கிறேன். ஆனால் என்னுடைய ஓராண்டில் இரண்டரை மாத காலத்தை நான் இந்த டிராபிக்கிலேயே நேரத்தை போக்குகிறேன் என குறிப்பிட்டு இருக்கிறார் . நான் செலுத்தக்கூடிய வரி எனக்கு சிறந்த சாலை உள்கட்டமைப்புகளையும் சிறந்த நகரத்தையும் தானே ஏற்படுத்தி தர வேண்டும் ஆனால் நான் எவ்வளவு வரி செலுத்தினாலும் எனக்கு கிடைப்பது இதுதான் நான் ஒரு மாதத்தில் இரண்டரை மாதத்திற்கு மேலாக டிராபிக் ஜாமிலேயே நேரத்தை போக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டு இருக்கிறேன் என கூறியிருக்கிறார்.
தவறான திட்டமிடல் , மோசமான உள்கட்டமைப்பே இதற்கு காரணம் என அவர் கூறியிருக்கிறார். அவருடைய இந்த பதிவுக்கு ஒரு நபர் இதே பெங்களூரில் வேலை செய்யக்கூடிய ஒரு நபர் தூய்மையான காற்று , போக்குவரத்து பிரச்சனையே இல்லாத ஒரு இடத்தில் வேலை செய்தால் தற்போது இருப்பதை விட 20 சதவீதம் கூடுதல் செயல் திறனோடு வேலை செய்வார் என பதில் அளித்திருக்கிறார்.
ஒரு பயனர் அனைவருமே வேலை வாய்ப்புக்காக பெங்களூருவை நோக்கி வருகின்றனர் ஆனால் துபாய் போன்ற ஒரு உள்கட்டமைப்பு வேண்டும் என்கிறார்கள் ஏன் நீங்கள் இரண்டாம் நிலை நகரங்களில் இருக்கக்கூடிய அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்லலாமே என கேள்வி எழுப்பியிருக்கிறார் .


Click it and Unblock the Notifications