வாழ்க்கை ஒரு வட்டம் என கூறுவார்கள் அது நடிகர் சுனிலுக்கும் அவரது தந்தைக்கும் மிகவும் பொருந்தும். பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, அண்மையில் கூட நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
சாதாரண குடும்பத்திலிருந்து சினிமாவில் நுழைந்து தற்போது மிகப்பெரிய நடிகராக உருவெடுத்திருக்கிறார். கடின உழைப்பு, நினைத்ததை அடைய போராடும் குணம் போன்றவையெல்லாம் இவருக்கு தந்தையிடம் இருந்து தான் வந்திருக்க முடியும்.

சுனில் ஷெட்டியின் தந்தை வீரப்ப ஷெட்டி 2017 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அண்மையில் இவர் தன்னுடைய தந்தை எப்படி தனது குடும்பத்தை முன்னுக்கு கொண்டுவர போராடினார் என்பது குறித்து ஒரு பாட்கேஸ்ட் நிகழ்ச்சியில் பகிர்ந்துள்ளார்.
பாரதி சிங் என்பவருடனான, பாட்கேஸ்டில் தனது தந்தை குறித்து பகிர்ந்துள்ள அவர், "என்னுடைய தந்தை மங்களூரில் இருந்து 9 வயதிலேயே மும்பைக்கு ஓடி வந்து விட்டார். அப்போது அவருக்கு அப்பா இல்லை. மூன்று சகோதரிகள் இருந்தனர் .எனவே அவர்களுக்காக மும்பையில் வந்து வேலை தேட தொடங்கினார்.
ஒன்பது வயதில் மும்பையில் இருந்த ஒரு தென்னிந்திய உணவகத்தில் அவருக்கு வேலை கிடைத்தது. அவருடைய முதல் வேலை இந்த உணவகத்தில் உள்ள சாப்பாடு மேசைகளை சுத்தம் செய்வது. உணவகத்திலேயே வேலை செய்து கொண்டு அங்கிருந்த அரிசி மூட்டைகளில் உறங்கிக் கொண்டு சிறுவயதிலிருந்தே குடும்பத்திற்காக பாடுபட்டார்" என கூறியுள்ளார்.
சாதாரண பணியாளராக வேலையை தொடங்கிய தன்னுடைய தந்தை படிப்படியாக முன்னேறி அந்த கட்டடத்தையே மேலாளராக வளர்ந்தார். ஒரு கட்டத்தில் அவருடைய முதலாளி ஓய்வு பெறும் போது என்னுடைய தந்தை அந்த மூன்று கட்டடத்தையும் சொந்தமாக வாங்கிக் கொண்டார்.
இன்றும் நாங்கள் அந்த மூன்று கட்டடத்தையும் சொந்தமாக வைத்து பராமரித்து வருகிறோம். இப்படித்தான் எங்களுடைய வாழ்க்கை தொடங்கியது. இது என்னுடைய தந்தையின் மிகப்பெரிய ஒரு சாதனை எனக் கூறியுள்ளார்.
1992 ஆம் ஆண்டு சினிமாவில் கால் பதித்தவர் நடிகர் சுனில் ஷெட்டி. "என்னுடைய தந்தை பொறுமையான ஒரு நபர் ஆனால் அவருடைய குழந்தைகளையோ அல்லது ஊழியர்களையோ யாரேனும் ஏதேனும் சொல்லிவிட்டால் உடனடியாக சிங்கமாக மாறி கர்ஜனை செய்வார்.
அவர் எப்போதும் ஒரு விஷயத்தை என்னிடம் கூறுவார் நான் நினைத்தால் இப்போது கூட அனைத்தையும் விற்பனை செய்து விட்டு கிராமத்திற்கே திரும்பி சென்று விட முடியும் ஆனால் என்னால் அங்கே இந்த சமத்துவமின்மையை மட்டும் சகித்துக் கொள்ள முடியாது" என கூறுவாராம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications