வரியை சேமிப்பதற்கு அனைத்து வரி செலுத்துபவருக்கும் உரிமை உள்ளது,
சரியான வழிமுறைகளில் வரியை சேமிக்கும் வரை அவர்களுக்கு நல்லது.
புதிய வரி செலுத்தும் திட்டத்தில் ஸ்டாண்டர்டு டிடக்ஷன் தவிர வேறு பிரிவுகளில் விலக்கு பெற முடியாது. பழைய வரி முறையில் சிலர் தவறான வழிமுறைகளைப் பயன்படுத்தியோ அல்லது போலி ஆவணங்களை தாக்கல் செய்தோ வரி விலக்கை பெற முயற்சிக்கின்றனர்.
அவர்கள் வருமான வரித்துறையை ஏய்த்துவிடலாம் என்று நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் மூலம் அவர்கள் செய்யும் முறைகேடுகளை வருமான வரித்துறை கண்டுபிடித்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

ஐடி ரிட்டர்ன் தாக்கல் செய்ய கடைசி நாளான ஜூலை 31 நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் தவறு செய்பவர்கள் எப்படி சிக்குவார்கள் என்பதை தெரிந்து கொள்வது நல்லது. போலி வாடகை ரசீதை கண்டுபிடிக்க ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸை வருமான வரித் துறை பயன்படுத்துகிறது.
பார்ம்-16 உடன் ஏஐஎஸ் பார்ம் மற்றும் பார்ம்- 26 ஏஎஸ் உடன் வாடகை ரசீது ஒப்பிடப்படும். பான் கார்டு தொடர்புடைய இந்த பார்ம்களின் அத்தனை பரிவர்த்தனைகளையும் இது சரிபார்க்கிறது.
வரி செலுத்துபவர் வாடகை ரசீதுகள் மூலமாக வீட்டு வாடகைப் படியை திரும்பப் பெற விண்ணப்பித்தால் வருமான வரித் துறை இந்த ரசீதை மேற்சொன்ன பார்ம்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும். இதில் ஏதாவது வித்தியாசம் இருந்தால் உடனடியாகத் தெரிந்து விடும். இந்தப் பணியை ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் செய்யும்.
கம்பெனியில் இருந்து வீட்டு வாடகை அலவன்ஸ் வாங்கியிருந்தால் மட்டுமே ஒருவர் வரி தாக்கல் போது அந்த வீட்டு வாடகை அலவன்ஸை கிளெய்ம் செய்யலாம். அதேவேளையில் ஒரு ஊழியர் வருடத்துக்கு ரூ.1 லட்சத்துக்கு மேல் வாடகை செலுத்தியிருந்தால் அவர் வீட்டு உரிமையாளரின் பான் கார்டு எண்ணை தெரிவிக்க வேண்டும். உரிமையாளர் தனது வரி தாக்கலில் இதைத் தெரிவிப்பார்.
இதை வைத்து வருமான வரித் துறையானது நீங்கள் கிளெய்ம் செய்யும் வீட்டு வாடகை அலவன்ஸை உங்களது வீட்டு உரிமையாளரின் பான் கார்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கும். நீங்கள் தந்த வாடகை விவரம் இதில் தெரியும்.
பான் தொடர்பான அனைத்து பரிவர்த்தனைகளையும் ஏஐஎஸ் பார்மில் நிரப்பப்பட்டிருக்கும். இந்த இரண்டில் வித்தியாசம் இருந்தால் உங்களுக்கு வருமான வரித் துறையிடம் இருந்து நோட்டீஸ் வரும்.
உங்கள் கம்பெனி உங்களுக்கு வீட்டு வாடகை அலவன்ஸ் தரும்பட்சத்தில் நீங்கள் ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கு குறைவாக வீட்டு வாடகை அலவன்ஸை கிளெய்ம் செய்யும்போது உங்களது வீட்டு உரிமையாளரின் பான் விவரத்தை தெரிவிக்கத் தேவையில்லை.
அதுபோன்ற சமயத்தில் நீங்கள் ரூ.1 லட்சம் வரை வீட்டு வாடகை அலவன்ஸை கிளெய்ம் செய்து கொள்ளலாம். அதை சரியா அல்லது போலியா என்பது குறித்து வருமான வரித் துறை சரிபார்க்காது.
வீட்டு வாடகை அலவென்ஸில் பெரிய அளவு மோசடி நடப்பதற்கு காரணம், இதன் மூலம் தான் பெரிய அளவு வரிவிலக்கு கிடைக்கிறது.
எடுத்துக்காட்டாக, நீங்கள் மாத வாடகை ரூ.25,000 என்று குறிப்பிட்டால் அது வருடத்துக்கு ரூ.3,00,000 ஆகும். இந்த தொகைக்கு வரி விதிப்பு இருக்காது.
இதுபோன்ற சூழலில் தான் நிறைய பேர் போலி வாடகை ரசீதுகளை தந்தால் தங்களால் வரியை சேமிக்க முடியும் என்று நினைத்து விடுகின்றனர். ஆனால் நிலைமை மாறிவிட்டது. இப்போது ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் பயன்படுத்துவதால் போலி ரசீதுகள் எளிதாகப் பிடிபட்டு விடுகின்றன.
Story written by: Jayachandran


Click it and Unblock the Notifications