இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப்பின் அலுவலகங்கள் மற்றும் அதன் தொடர்புடைய உயர் அதிகாரிகள் என 25 இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி, குருகிராம் மற்றும் வட இந்தியாவின் பிற பகுதிகளில் உள்ள அலூவலகங்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த அதிரடியான சோதனையானது ஹீரோ மோட்டோகார்ப்பின் தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரியான பவன் முஞ்சால் உள்பட பலரையும் உள்ளடக்கியதாக கூறப்படுகின்றது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஐடி நடவடிக்கையானது தற்போது வரையில் தொடர்ந்து கொண்டுள்ளது.
எதற்காக இந்த ரெய்டு?
இந்த அதிரடி சோதனையானது வரி ஏய்ப்பு செய்தததாக எழுந்த புகாரின் அடிப்படையில் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தற்போதைய நிலையில் 40 நாடுகளில் தனது வணிகத்தினை விரிவுபடுத்தியுள்ள பவன், ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் மத்திய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வணிகம் செய்து வருகின்றது.
சர்வதேச அளவில் உற்பத்தி
மேலும் உலகளாவிய அளவில் 8 மேம்படுத்தப்பட்ட உற்பத்தி ஆலைகளையும் ஹீரோ கொண்டுள்ளது. இதில் இந்தியாவில் 6 ஆலைகளும், கொலம்பியா மற்றும் பங்களாதேஷில் தலா ஒன்றும் உள்ளது.
இந்தியாவின் இருசக்கர வாகன சந்தையில் 50% அதிகமான பங்கினைக் கொண்ட ஹீரோ மோட்டோகார்ப், இந்திய சந்தையில் பெரும் ஆதிக்கத்தினை செலுத்தி வருகின்றது.
பங்கு விலை வீழ்ச்சி
எனினும் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.
இதற்கிடையில் வருமான துறை சோதனை நடத்தி வரும் நிலையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பங்கு விலையானது, கிட்டதட்ட 2% வீழ்ச்சி கண்டு, என்.எஸ்.இ-யில் 2379.50 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 2439.80 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 12.40 மணி நிலவரப்படி 2327 ரூபாயாகும்.
பி.எஸ்.இ-யில் என்ன நிலவரம்?
பி.எஸ்.இ-யில் 1.77% வீழ்ச்சி கண்டு 2378.50 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 2439.70 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 12.40 மணி நிலவரப்படி 2328.85 ரூபாயாகும்.இதன் 52 வார உச்ச விலை 3141.55 ரூபாயாகும். இதன் 52 வார குறைந்தபட்ச விலை 2148 ரூபாயாகும்.
இப்பங்கின் விலையில் தற்போது அதிகளவிலான ஏற்ற இறக்கம் இருப்பதால் முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications