இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனம் என் ஆர் நாராயண மூர்த்தி, நான் தவறு செய்து விட்டேன் என ஒப்புக் கொண்டுள்ளார்.
ஏன் எதற்காக தவறு செய்தார்? எதற்காக இப்படி கூறியுள்ளார். நாராயண மூர்த்தியின் இந்த கருத்துக்கு என்ன காரணம், வாருங்கள் பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ், அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரி பொறுப்பில் இருந்து விலகினார்.
எனது நிலைப்பாடு தவறு
அந்த சமயத்தில் நாராண மூர்த்தியின் மகன் ரோஹன் மூர்த்தியும் அவரது பதவியில் இருந்து விலகினார். இதன் காரணமாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் தலைமை பதவியில் நாராயண மூர்த்தி குடும்பத்தினர் யாரும் இல்லை. வாரிசு தலைமை வேண்டாம் என்று நினைத்திருந்த நிலையில், வாரிசுகள் அனுமதிக்கப்பட்டிருந்தால் நிறுவனத்தை சரியானதொரு தலைமை வகித்திருக்கலாம். அடுத்த வாரிசு யார் என்ற கவலை தீர்ந்திருக்குமா? என்ற கேள்விக்கு, அப்படி செய்யாதது தனது தவறு. எனது முந்தைய நிலைப்பாடு என்பது தவறு என்றும் கூறியுள்ளார்.
என்ன கொள்கை அது?
குடும்ப உறுப்பினர்கள் தலைமை பதவியில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்ற நிறுவனத்தின் கொள்கையின் படி, தற்போது நிறுவனத்தில் சரியான தலைமை பொறுப்புக்கு ஆள் இல்லாததை அடுத்து இத்தகைய கருத்தினை நாராயண மூர்த்தி கூறியிருக்கலாம். இதனை தான் தவறு எனவும் சுட்டிக் காட்டியுள்ளார்.
நிறுவனம் வலுவாக இருக்க வேண்டும்
நான் இந்த நிறுவத்தின் முறையான திறமைகளை இழக்கிறேன். நான் சொன்னதை திரும்ப பெறுகிறேன் என்று கூறிய மூர்த்தி, தனது முந்தைய கருத்து குறித்து கூறிய மூர்த்தி, சிலர் தகுதியவற்றரவர்களை கொண்டு வந்து இந்த பதவிகளில் பணியமர்த்தக் கூடும் என்று பயந்ததால்,இத்தகைய முடிவினை எடுத்தாகவும் தெரிவித்துள்ளார். அதோடு நிறுவனத்தின் எதிர்காலம் வலுவான இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கவலை வேண்டாம்
நான் முற்றிலும் தவறு செய்துவிட்டேன். அதனை திரும்ப பெற்றுக் கொள்கிறேன். நான் தவறு செய்ததை ஒப்புக் கொள்கிறேன். இன்று எனது கருத்து நீங்கள் எந்த நாடு, என்ன பாரம்பரியம், நீங்கள் யாருடைய மகன் அல்லது மகள் என்பது குறித்து கவலைப்பட வேண்டாம். ஒரு பதவிக்கான தகுதி உங்களிடத்தில் இருக்கிறதா? என்பதை பாருங்கள்.
நந்தன் நீல்கேனி
இதற்கிடையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் தலைவர் நந்தன் நீல்கேனி, அவரது பொறுப்பினை வேறு ஒருவரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இன்போசிஸ் நிறுவனத்தின் 40 ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொண்ட நீல்கேனி, தனது பதிவியினை நிறுவனர் அல்லாத ஒருவரிடம் ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.
திட்டம் பி இல்லை
என்னிடன் திட்டம் பி எதுவும் இல்லை. நான் தான் எஞ்சியிருக்கும் தலைவர். எனக்கு பிறகு தலைவர் அல்லாத ஒருவரிடம் ஒப்படைக்க விரும்புகிறேன். நாங்கள் விரைவில் புதிய தலைவர் வரும் வரையில் இருப்பேன். எனினும் இதற்காக அதிக நேரம் இருக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
சரியான நபர் கிடைக்கவில்லை
வரவிருக்கும் 50 ஆண்டு விழாவில் கலந்து கொள்வோமா என்பது தெரியாது. அடுத்த இன்ஃபோசிஸ் தலைவர் யார் என்ற கேள்விக்கு, இதுவரை சரியான நபர் கிடைக்கவில்லை என நீல்கேனி கூறியுள்ளார். மேலும் இன்ஃபோசிஸ் குறைந்தது 100 வருடங்களாவது செழிக்க வேண்டும் என்ற நிறுவனர் நாராயண மூர்த்தியின் கூற்றைக் குறிப்பிட்டு, 100 ஆண்டுகளுக்கான ஆணையானது நடைமுறையில் உள்ளது என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications