குடிமைப் பணிகள் இந்தியாவிலேயே உயர்ந்த மற்றும் கௌரவமான பணியாக கருதப்படுகிறது. இவ்வாறு ஐஏஎஸ் அதிகாரிகள் ஆன பலரும் அவ்வப்போது செய்திகளில் வந்து கவனம் பெறுவார்கள். அப்படி ஒருவர் தான் அமித் கட்டாரியா.
இந்தியாவின் பணக்கார ஐஏஎஸ் அதிகாரி அமித் கட்டாரியா அடிக்கடி செய்திகளில் இடம் பிடிக்கும் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. இந்த முறை அவருடைய சொத்து மதிப்புக்காக மீண்டும் ஒருமுறை தலைப்புச் செய்தி ஆகி இருக்கிறார்.

அண்மையில் வெளியான செய்திகளின் அடிப்படையில் இந்தியாவின் பணக்கார ஐஏஎஸ் அதிகாரியாக அமித் கட்டாரியா இருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு 8.9 கோடி ரூபாய் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2004 ஆம் ஆண்டு சத்தீஸ்கர் கேடரை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி தான் அமித் கட்டாரியா. ஏழு ஆண்டு காலம் மத்திய அரசில் பயணிபுரிந்து வந்த அமித் கட்டாரியா அண்மையில் தான் மாநில அரசு நிர்வாகத்தில் பணிக்கு சேர்ந்தார்.
2003 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் 18ஆவது ரேங்க் பெற்றவர். அண்மையில் தான் இவர் மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகத்தில் ஜாயிண்ட் செகரட்டரியாக நியமனம் செய்யப்பட்டார் .
அதற்கு முன்பு அவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியராக பணிபுரிந்தார். டெல்லி ஆர் கே புறத்தில் உள்ள பப்ளிக் ஸ்கூலில் பள்ளி படிப்பை முடித்த இவர் பின்னர் டெல்லி ஐஐடி கல்வி நிறுவனத்தில் மேல் படிப்பை முடித்தார்.
குடிமை பணிகளில் ஆர்வம் வந்து யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி தேசிய அளவில் 18ஆவது ரேங்க் பெற்றார். அவருடைய சொத்து மதிப்பு தற்போது 8.9 கோடி ரூபாய்ஆகும் . இந்தியாவின் பணக்கார ஐஏஎஸ் அதிகாரியாக அறியப்படுகிறார்.
இவருடைய சொத்தின் பெரும்பாலான பகுதி இவரது ஊதியத்தில் இருந்து வரவில்லை , இவருடைய குடும்பம் பாரம்பரியமாக ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வருகிறது . அதில் கிடைத்த பங்குகள் மூலம் இவருக்கு சொத்தில் கணிசமான தொகை கிடைத்திருப்பதாக தெரிகிறது.
செல்வச்செழிப்பான குடும்பத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், தனிப்பட்ட நிதி ஆதாயத்தை விட தேசத்திற்கு சேவை செய்வதில் அதிக கவனம் செலுத்துவதற்காக தனது ஐ.ஏ.எஸ் பணிக்காக 1 ரூபாய் சம்பளத்தை மட்டுமே பெற்றுக்கொண்டார். அப்போது செய்திகளில் இடம் பிடித்த இவர், 2015ஆம் ஆண்டு பிரதமர் மோடி சத்தீஸ்கர் வந்திருந்த போது பஸ்தாரின் ஐஏஎஸ் அதிகாரி அமித் கட்டாரியா சன்கிளாஸ் அணிந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இப்படி சர்ச்சைகள் ஒரு புறம் இருந்தாலும் தன்னுடைய சிறப்பான பணிக்காகவும் அறியப்படுகிறார் அமித் கட்டாரியா. தன்னுடைய திறமையான நிர்வாகத்தால் பல அங்கீகாரங்களையும் பெற்றுள்ளார்.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications