வங்கிகளில் பணம் எடுக்க புதிய விதிமுறைகள்.. இன்று முதல் அமல்.. யார் என்று பணத்தினை எடுக்கலாம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இந்தியாவிலும் அதே நிலை தான் நீடித்து வருகிறது.

 

இதற்கிடையில் கொரோனாவின் தாக்கத்தினை கருத்தில் கொண்டு மூன்று மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும், பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டலங்களில் முக்கியமான கட்டுப்பாடுகளில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

எனினும் சிவப்பு மண்டலத்தில் கட்டுப்பாடுகள் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

வங்கிகளுக்கான விதிமுறைகள்

வங்கிகளுக்கான விதிமுறைகள்

இந்தியாவில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் கூட்டத்தினை தவிர்க்க, பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியான வங்கிகளில் பணம் எடுக்கவும் சில புதிய விதிமுறைகளை வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் இதுவரை குறைந்த பணியாளர்களுடன் காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே இயங்கி வந்த வங்கிகள், இன்று முதல் 50% பணியாளர்களுடன் வழக்கமான நேரத்தில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் புதிய விதிமுறைகள்

இன்று முதல் புதிய விதிமுறைகள்

அது மட்டும் அல்ல சுழற்சி முறையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் செயல்படுவார்கள் எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள வங்கிக் கிளைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் அல்ல வங்கிகளில் பணம் எடுப்பதற்கான விதிமுறைகளையும் வங்கிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

யார் எப்போது பணம் எடுக்கலாம்?
 

யார் எப்போது பணம் எடுக்கலாம்?

அந்த புதிய விதிகளின் படி, பூஜ்யம் மற்றும் 1 ஆகிய எண்களை கடைசி எண்ணாக வைத்துள்ள வாடிக்கையாளர்கள் மே 4ம் தேதி பணம் எடுத்துக் கொள்ளலாம். இதே போல் கடைசி எண் 2 மற்றும் 3 வைத்துள்ள வாடிக்கையாளார்கள் மே 5ம் தேதி பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

 பணம் எடுக்க விதிமுறைகள்

பணம் எடுக்க விதிமுறைகள்

இதே கடைசி எண் 4 மற்றும் 5 ஆகக் கொண்ட வாடிக்கையாளர்கள் மே 6ம் தேதி பனம் எடுத்துக் கொள்ளலாம். இதே 6 மற்றும் 7 எண் உடையோ மே 8ம் தேதியும், இதே 8 மற்றும் 9 எண்ணினை கொண்டவர்கள் மே 11 அன்று பணத்தினை எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் மே 11 வரை அமலில் இருக்கும் என்றும், மே 11 க்கு பிறகு எந்த வாடிக்கையாளர்கள் எப்போது வேண்டுமானாலும் பணத்தினை எடுத்துக் கொள்ளலாம் என்றும் வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IBA brings new rules to withdraw money during lock down

Indian banks association brings new rules to withdraw money during this lockdown period
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X