அடிச்சான் பாரு ஆர்டர்.. ஐபிஎம் அறிவிப்பால் ஐடி ஊழியர்கள் கொண்டாட்டம்..!

அமெரிக்காவில் இருந்த layoff Season இந்தியாவிலும் துவங்கியது போல் சுத்தி சுத்தி ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிடத் தயாராகியுள்ளது.

சமீபத்தில் சோமேட்டோ ஊழியர்கள் பணிநீக்கத்தை அறிவித்த நிலையில், இன்று பெங்களூரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Hirect என்னும் வேலைவாய்ப்பு சேவை நிறுவனம் 40 சதவீத ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில் உலகின் மிகப்பெரிய டெக் சேவை நிறுவனமான ஐபிஎம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

பணிநீக்க அறிவிப்புகள்

பணிநீக்க அறிவிப்புகள்

உலகம் முழுவதும் பெரிய நிறுவனங்கள் பணிநீக்க அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டு வரும் நேரத்தில் உலகின் மிகவும் பழமையான டெக் சேவை நிறுவனமான IBM சுமார் 5,00,000 ஊழியர்களை அடுத்த 5 வருடத்தில் இந்தியாவில் தேர்வு செய்து சைபர்செக்யூரிட்டி பிரிவில் பயிற்சி அளித்து வல்லுனர்களாக மாற்ற உள்ளதாக ஐபிஎம் உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.

5,00,000 ஊழியர்கள்

5,00,000 ஊழியர்கள்

ஐபிஎம் நிறுவனத்திற்குத் தற்போது வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் சந்தைகளில் ஆசிய பிசிபிக் மற்றும் இந்தியா ஆகியவை மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது. இந்த நிலையில் ஐபிஎம் இச்சந்தையில் சைபர்செக்யூரிட்டி பிரிவில் தொடர்ந்து அதிகப்படியான முதலீட்டை செய்யும் என ஐபிஎம் செக்யூரிட்டி APAC பிரிவின் தலைமை தொழில்நுட்ப அதிகாரியாக இருக்கும் Chris Hockings அறிவித்துள்ளார்.

சைபர்செக்யூரிட்டி சேவை

சைபர்செக்யூரிட்டி சேவை

ஐபிஎம் வளர்ச்சிக்கு இந்தியா மிகவும் முக்கியமானதாக மாறியிருக்கும் நிலையில் தனது முக்கியமான வளர்ச்சி திட்ட பிரிவான சைபர்செக்யூரிட்டி சேவைக்கு இந்தியாவைச் சென்டராக மாற்றியுள்ளது. இது மட்டும் அல்லாமல் ஐபிஎம் நிறுவனத்தின் பல முக்கிய மென்பொருள் மற்றும் செக்யூரிட்டி ப்ராடெக்ட்ஸ் இந்தியாவில் உருவாக்கப்பட்டு உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டதால் ஐபிஎம் தனது சைபர்செக்கியூரி தளத்தை இந்தியாவில் அமைக்க முடிவு செய்துள்ளது.

2வது சைபர்செக்யூரிட்டி ஹப்

2வது சைபர்செக்யூரிட்டி ஹப்

இதற்காகவே ஐபிஎம் அமெரிக்காவின் பாஸ்டன் நகருக்கு அடுத்த படியாக இந்தியாவில் 2வது சைபர்செக்யூரிட்டி ஹப் அமைத்துள்ளது. இதுதான் ஆசிய பசிபிக் சந்தையின் முதல் சைபர்செக்யூரிட்டி ஹப் ஆகும். இதேபோல் இந்தியாவில் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யப் பல மில்லியன் டாலர் முதலீட்டில் அலுவலகங்களை அமைத்து வருகிறது ஐபிஎம்.

சைபர் செக்யூரிட்டி தளமாக

சைபர் செக்யூரிட்டி தளமாக

இந்தியாவை ஐபிஎம் தனது சைபர் செக்யூரிட்டி தளமாக மாற்ற, முக்கியக் காரணம் இந்தியாவில் சைபர் ரேன்ஞ்ச், ஆப்ரேஷனல் கமெண்ட் சென்டர், டெவலப்மென்ட் செக்யூரிட்டி என இத்துறைக்குத் தேவையான அனைத்தும் இந்தியாவில் இருப்பது தான்.

5 லட்சம் ஊழியர்கள்

5 லட்சம் ஊழியர்கள்

சர்வதேச சைபர்செக்யூரிட்டி வர்த்தகத்திற்கு இந்தியாவைச் சென்டராக மாற்றுவது மட்டும் அல்லாமல் அடுத்த 5 வருடத்தில் 5 லட்சம் ஊழியர்களைச் சைபர் செக்யூரிட்டி பிரிவில் தேர்வு செய்து பயற்சி அளித்துத் தனது சர்வதேச சந்தை தேவையைப் பூர்த்திச் செய்ய உள்ளது.

ஐபிஎம் விரிவாக்கம்

ஐபிஎம் விரிவாக்கம்

இந்தியாவில் அடுத்தடுத்து அலுவலகத்தை விரிவாக்கம் செய்தும், ஊழியர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் ஐபிஎம் தனது ஊழியர்களுக்குக் மூன்லைட்டிங் குறித்துக் கடுமையான எச்சரிக்கை உடன் முக்கிய அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தீவிரமான பிரச்சனை

தீவிரமான பிரச்சனை

ஒவ்வொரு ஐபிஎம் ஊழியர்களும் தங்களது முழுமையான திறனையும், மனத்தையும் பணியில் காட்ட வேண்டும். உங்கள் செயல்கள் ஐபிஎம் நிறுவனத்தின் நலன்களைப் பாதித்தாலோ அல்லது இழப்பை ஏற்படுத்தினால் தீவிரமான பிரச்சனைக்கும் வழிவகுக்கும் என ஐபிஎம் இந்தியா நிர்வாகத் தலைவர் சந்தீப் பட்டேல் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+