டெக் மற்றும் டிஜிட்டல் சேவை துறையில் இருக்கும் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற முடியும் என்பதால் கொரோனா தொற்றின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தே இத்துறை ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றி வந்தனர்.
கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு அதிகமாக வீட்டில் இருந்து பணியாற்றியதால் ஊழியர்களை நிறுவனங்கள் அலுவலகத்திற்கு அழைத்தாலும் வர மறுப்பு தெரிவித்து வரும் வேளையில், கடந்த 6 மாதம் பல ஊழியர்கள் ஹைப்ரிட் முறையை தேர்வு செய்துள்ளனர்.

இந்த நிலையில் IBM சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா முக்கியமான எச்சரிக்கையை தனது நிறுவன ஊழியர்களுக்கு விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கை IBM நிறுவனத்தை தாண்டி பல துறை ஊழியர்களுக்கும் அதிர்ச்சி அளித்துள்ளது என்றால் மிகையில்லை. இதனால் அடுத்த சில வாரத்தில் வொர்க் ப்ரம் ஹோம் மற்றும் ஹைப்ரிட் மாடலில் மிகப்பெரிய மாற்றம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
100 வருடத்திற்கும் மேலாக இயங்கி வரும் டெக் நிறுவனமான IBM-ஐ அடிமட்டத்தில் இருந்து உயர்மட்டம் வரையில் மாற்றியமைத்து வரும் முக்கிய பணியில் தீவிரமாக பணியாற்றி வரும் IBM சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா தனது 2,60,000 ஊழியர்களுக்கு அனுப்பிய ஈமெயிலில் ரிமோட் வொர்க் அதாவது வீட்டில் இருந்து பணியாற்றுவது உங்களின் கரியர்-க்கு பெரும் ஆபத்து என தெரிவித்துள்ளார்.
ரிமோட் வொர்க் கட்டமைப்பு ஐபிஎம் நிறுவனத்தின் ஹைப்ரிட் கிளவுட் கம்ப்யூட்டிங் வளர்ச்சிக்கு பெரிய அளவில் உதவிய போதும், தான் எந்தொரு ஊழியரையும் அலுவலகத்திற்கு அழைக்கவில்லை. ஆனால் மேனேஜர் பதவிக்கு முன்னேற திட்டமிடுவோருக்கு ரிமோட் வொர்க் செட் ஆகாது என தெரிவித்துள்ளார் அரவிந்த் கிருஷ்ணா என தெரிவித்துள்ளார்.

IBM சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா நியூயார்க்-ல் நடந்த ஒரு நேர்காணலில் ஊழியர்களை நிர்வாகம் செய்யும் மேனேஜர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவது கடினம், தனது நிர்வாகத்திற்கு கீழ் இருக்கும் ஊழியர்களை நேரடியாக கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்க முடியாது என்றாலும் Everybody's under my eye என்ற தொனியில் அவ்வப்போது கண்காணிப்பில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
IBM சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா-வின் கருத்து கார்ப்பரேட் உலகில் மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்-ல் இருக்கும் சாதக பாதகங்களையும், அலுவலகத்தில் பணியாற்றும் போதும் இருக்கும் சாதக பாதகங்களையும் ஆராய துவங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications