அமெரிக்காவை சேர்ந்த ஐபிஎம் நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி ரிஜிஸ்டர் என்ற தளம் வெளியிட்டுள்ள செய்தியில் ஐபிஎம் நிறுவனம் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் செயல்படும் தங்களுடைய அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக ஐபிஎம் நிறுவனத்தின் கிளவுட் கிளாசிக் பிரிவில் தான் ஏராளமானவர்கள் பாதிக்கப்பட இருக்கிறார்கள். நியூயார்க் , டல்லாஸ், டெக்ஸாஸ், கலிபோர்னியா ஆகிய பகுதிகளில் இருக்கும் ஐபிஎம் நிறுவனங்களின் ஊழியர்கள் இந்த பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட இருப்பதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.
எத்தனை பேர் இந்த முறை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த எண்ணிக்கை ஆயிரங்களில் இருக்கும் என்று தகவல் வெளியாகி இருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது. மேலும் பல்வேறு துறைகளை சேர்ந்த ஊழியர்கள் இந்த பணி நீக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கன்சல்டிங், கிளவுட், சேல்ஸ் மற்றும் ஐடி சிஸ்டம் உள்ளிட்ட பிரிவுகளில் பணியாற்றும் நூற்றுகணக்கான ஊழியர்கள் இந்த முறை பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் தான் ஐபிஎம் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் ஏராளமானவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் மற்ற பிரிவுகளிலும் இந்த பணி நீக்க நடவடிக்கை தொடங்கப்பட்டிருக்கிறது. பணி நீக்க நடவடிக்கைகள் நிறுவனம் வழக்கமாக செய்யும் மறுக்கட்டமைப்பின் ஒரு பணியாகத்தான் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பணி நீக்க நடவடிக்கையின் மூலம் கிளவுட் கிளாசிக் பிரிவில் பணியாற்றி வந்த 10 சதவீத ஊழியர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. பலருக்கும் திடீரென நிறுவனம் சார்பில் பணி நீக்க அறிவிப்புகள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றனவாம். ஐபிஎம் நிறுவனம் அண்மையில் தான் தங்களுடைய ஊழியர்கள் கட்டாயம் வாரத்தில் மூன்று நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டது.
ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்த அறிவிப்பை ஏற்காத ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்திருந்தது. இந்த சூழலில் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிர்ச்சியை தந்துள்ளது.
பொருளாதார ஸ்திரமற்ற தன்மை , ஆட்டோமேஷன், ஏஐ பயன்பாடு ஆகியவை காரணமாக பல்வேறு அமெரிக்க டெக் நிறுவனங்களும் தீவிரமாக ஊழியர்கள் பணி நீக்க நடவடிக்கையை மேற்கொண்டு இருக்கின்றன. இதனால் மைக்ரோசாப்ட், அமேசான், மெடா உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் பணியாற்றி வரக்கூடிய ஊழியர்கள் தினம்தோறும் அச்சத்துடனே வேலைக்கு சென்று வருகின்றனர்.
உலகளவில் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த டெக் நிறுவனங்கள் இந்த பணி நீக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. 2025ஆம் ஆண்டு தொடக்கம் முதல் தற்போது வரை சுமார் 28,000 பேர் அமெரிக்க நிறுவனங்களால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
More From GoodReturns

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications