உலகின் மிகவும் பழமையான சாப்ட்வேர் நிறுவனமான IBM கடந்த 15 வருடத்தில் மிகப்பெரிய ரோலர்கோஸ்டர் பயணத்தை எதிர்கொண்டு உள்ளது. இந்த கடுமையான பயணத்தை இந்திய அமெரிக்கரான அரவிந்த் கிருஷ்ணா சிஇஓ நியமிக்கப்பட்ட பின்பு நிர்வாகத்திலும், வர்த்தகத்திலும், ஊழியர்கள் சேர்ப்பு விகிதத்திலும் செய்த மாற்றங்கள் ஐபிஎம் நிறுவனம் மீண்டும் வலிமையாக மாறி வருகிறது.
இந்த சூழ்நிலையில் தான் செயற்கை நுண்ணறிவு அதாவது AI எழுச்சி உலகமே வியக்கும் வண்ணம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. செயற்கை நுண்ணறிவு அனைத்து வர்த்தகம் மற்றும் சேவை துறையிலும் இதன் பங்கு அதிகரித்துள்ள வேளையில் ஐபிஎம் நிறுவனமும் செலவுகளை குறைக்கும் விதமாக AI தொழில்நுட்பத்தை தனது வர்த்தகத்தில் ஈடுப்படுத்த முடிவு செய்துள்ளது.

IBM நிர்வாகம் இனி வரும் காலத்தில் செயற்கை நுண்ணறிவு மூலம் செய்யப்படும் வேலைகளுக்கு புதிதாக சேர்க்கப்படும் ஊழியர்களின் Hiring பணியை நிறுத்த எதிர்பார்ப்பதாக ஐபிஎம் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இது ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐபிஎம் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா ஒரு நேர்காணலில் கலந்து கொண்டு பேசிய போது பேக் ஆஃபீஸ் ஃபங்ஷன் அதாவது மனிதவள பிரிவு போன்ற பல பிரிவு ஊழியர்களின் சேர்ப்பை நிறுத்தவோ அல்லது ஆட்சேர்ப்பு வேகத்தை குறைக்கவோ திட்டமிட்டு உள்ளதாக அறிவித்தார். வாடிக்கையாளர்களை நேரடியாக தொடர்பு கொள்ளாத ஊழியர்கள் மட்டுமே 26000 பேர் உள்ளனர்.
இந்த நிலையில் அடுத்த 5 வருடத்தில் இந்த 26000 ஊழியர்களில் சுமார் 30 சதவீத ஊழியர்களை ஐபிஎம் நிறுவனத்தில் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஆட்டோமேஷன் ஆகிய தொழில்நுட்பத்தின் உதவிகளில் சுமார் 7800 ஊழியர்களை பணிநீக்கம் செய்துவிட்டு, இந்த இடத்தை நிரப்பாமல் விட முடியும் என ஐபிஎம் செய்தி தொடர்பாளரும் தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு வாடிக்கையாளர் சேவை பிரிவில் பெரும் தாக்கத்தையும், பிற முக்கியமான பிரிவில் மக்களின் இடத்தை AI தொழில்நுட்பம் ஆட்கொள்ளும் என அச்சம் நிலவி வந்த நிலையில், இதை உறுதி செய்யும் வகையில் ஐபிஎம் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா-வின் பதில் முன்னோடியாகவும் அச்சத்தையும் ஏற்படுத்துகிறது.

ஐபிஎம் நிறுவனத்தில் சுமார் 260000 ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள், ஐபிஎம் சிஇஓ அரவிந்த் கிருஷ்ணா கருத்துக்கள் படி நிறுவனம் தொடர்ந்து சாப்ட்வேர் டெவலப்பர்கள், வாடிக்கையாளர்களை எதிர்கொள்ளும் ஊழியர்களை தொடர்ந்து பணியில் சேர்க்கும். இதேபோல் ஐபிஎம் இந்த ஆண்டு 5000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.
இன்றைய வர்த்தக சூழ்நிலையில் ஒரு நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு லாபத்தையும், லாபத்தில் வளர்ச்சியை காட்டியாக வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இதற்காக நிறுவனமும் எந்தொரு முடிவையும் எடுத்த தயாராக உள்ளது என்றால் மிகையில்லை. இதற்கு முக்கியமான உதாரணம் பல பில்லியன் டாலர்களை பணமாக வைத்திருந்தாலும் கூகுள், மைக்ரோசாப்ட், அமேசான் போன்றவை பல ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications