இந்திய ஐடி ஊழியர்களுக்கு ஐபிஎம் கொடுத்துள்ள சூப்பர் வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..!

கொரோனாவின் வருகைக்கு பிறகு ஐடி துறையில் ஏராளமான வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கிறது. குறிப்பாக மிகப்பெரிய ஐடி நிறுவனங்களும் தங்களது கேம்பஸ் இண்டர்வியூக்களை சமீபத்திய காலமாக மீண்டும் ஆரம்பித்துள்ளன. கடந்த வாரத்தில் ஐஐடி-யில் ஏராளமான சர்வதேச ஐடி நிறுவனங்களும் கேம்பஸில் கலந்து கொண்டன.

பல மாணவர்களும் இதில் நல்ல வாய்ப்புகளை பெற்றுள்ளதாக செய்திகள் வெளியானது.

இதற்கிடையில் முன்னணி ஐடி நிறுவனங்களான விப்ரோ, டிசிஎஸ், ஹெச்.சி.எல் டெக், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது பணியமர்த்தல் விகிதங்களை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

ஐபிஎம் பணியமர்த்தல்

ஐபிஎம் பணியமர்த்தல்

அதன் தொடர்ச்சியாக தற்போது அமெரிக்காவினை சேர்ந்த மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனமான ஐபிஎம், இந்தியாவில் பல்வேறு ஊழியர்களை பணியமர்த்த உள்ளதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக பெங்களூரில் இந்த பணியமர்த்தல் இருக்குமென்று கூறப்படுகிறது. இதில் மற்ற நகரங்களும் இடம் பெறலாம் என்றாலும், பெங்களூரில் அதிக பணியமர்த்தல் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தெந்த துறைகளில் பணியமர்த்தல்

எந்தெந்த துறைகளில் பணியமர்த்தல்

குறிப்பாக இந்த பணியமர்த்தல் ஆனது J2EE, Java, Javascript, NET or C# உள்ளிட்ட டெக்னிக்கல் துறைகளில் உள்ள நிபுணர்களாக இருக்கும் ஊழியர்களுக்கு அதிக தேவை உள்ளதாக கூறப்படுகிறது. இது தவிர இன்னும் பல்வேறு வகையான டெக்னிக்கல் தேவைகளும் உள்ளன. ஆக இது குறித்த முழு விவரங்களுக்கு இந்த நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

பணியமர்த்தல் அதிகரிப்பு

பணியமர்த்தல் அதிகரிப்பு

இதில் பல்வேறு விதமான ஐடி சார்ந்த உட்துறையில் பல்வேறு பணியிடங்களுக்கும் பணியமர்த்தல் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஐடி துறையில் மட்டும் அல்ல ஒட்டுமொத்த பணியமர்த்தலுமே தற்போது அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாத நிலவரப்படி, கடந்த ஆண்டினை காட்டிலும் 26% அதிகரித்துள்ளது.

தூள் கிளப்பிய ஐடி துறை

தூள் கிளப்பிய ஐடி துறை

குறிப்பாக சில்லறை துறையில் 47% அதிகரித்தும், ஹாஸ்பிட்டாலிட்டி துறையில் 58% அதிகரித்தும், கல்வித் துறையில் 54% அதிகரித்தும் காணப்பட்டது. இதே வங்கித் துறை மற்றும் நிதித்துறையிலும் கூட 30% மேலாக அதிகரித்துள்ளது. இதே ஐடி மற்றும் சாப்ட்வேர் துறையில் 50%க்கும் அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது.

நகர வாரியாக பணியமர்த்தல் விகிதம்

நகர வாரியாக பணியமர்த்தல் விகிதம்

இதே டெலிகாம் மற்றும் ISPதுறையில் தான் அதிகபட்சமாக 91% மேலாக வளர்ச்சி கண்டுள்ளது. இதே மெடிக்கல் மற்றும் ஹெல்த்கேர் துறை, எஃப்.எம்.சி.ஜி துறையில் முறையே 3% மற்றும் 6% மேலாக வளர்ச்சி கண்டுள்ளது.
இதில் நகர வாரியாக பார்க்கும்போது ஹைத்ராபாத் மற்றும் புனேவில் 47%மும், இதே பெங்களூரில் 49%மும் பணியமர்த்தல் அதிகரித்துள்ளது. இதே மும்பையில் 36%மும், டெல்லியில் 34%மும், சென்னையில் 35%மும், கொல்கத்தாவில் 23%மும் வளர்ச்சி கண்டுள்ளது.
இதே மெட்ரோ அல்லாத நகரங்களான அகமதாபாத்தில் 61%மும், கோயம்புத்தூரில் 28% வளர்ச்சி கண்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+