260000 சதுரடியில் பிரம்மாண்ட அலுவலகம் அமைக்கும் IBM.. அதுவும் இந்த ஊரில்..!!

அமெரிக்காவை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் டெல்லி அருகே குருகிராம் பகுதியில் 2,60,000 சதுர அடி அளவிலான அலுவலக தளத்தை குத்தகைக்கு எடுக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்திகள் டாடா ரியாலிட்டி நிறுவனத்தால் டிஆர்ஐஎல் டவர் பகுதியில் அலுவலக இடங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதில் 2, 60,000 சதுர அடி பரப்பு உள்ள அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுக்க ஐபிஎம் நிறுவனம் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது ஏ கிரேட் தரத்திலான அலுவலக இடங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது.

260000 சதுரடியில் பிரம்மாண்ட அலுவலகம் அமைக்கும் IBM.. அதுவும் இந்த ஊரில்..!!


சர்வதேச அளவிலான தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்கள் கட்டாயம் அலுவலகத்திற்கு வந்து தான் பணிபுரிய வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டு இருப்பதும் பல்வேறு நிறுவனங்களின் பன்னாட்டு திறன் கிளைகள் இந்தியாவில் நிறுவப்படுவதும் அலுவலக இடங்களுக்கான தேவை அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அது மட்டும் இல்லாமல் இந்தியாவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும் இதற்கு ஒரு காரணமாகும்.

எனவே குருகிராம் பகுதியில் பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு அலுவலக இடங்களை நிரப்பி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமின்றி இந்தப் பகுதியில் அலுவலக இடங்களை குத்தகைக்கு எடுப்பதற்கு சர்வதேச நிறுவனங்களிடையே கடுமையான போட்டி நிலவுவதாகவும் சொல்லப்படுகிறது. அண்மையில் தான் டாடா ரியாலிட்டி நிறுவனத்தால் குருகிராமில் டிஆர்ஐஎல் டவர் நிறுவப்பட்டது. இதில் ஏ கிரேட் தரத்தில் அலுவலக இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே அமெரிக்காவை சேர்ந்த நெட்வொர்க்கிங் சிஸ்டம்ஸ் நிறுவனமான சியானா 1,35,000 சதுர அடி அலுவலக இடத்தை குத்தகைக்கு எடுத்துள்ளது. தற்போது ஐபிஎம் நிறுவனமும் இதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தியாவில் 2024 ஆம் ஆண்டில் மட்டும் 83 முதல் 85 மில்லியன் சதுர அடி அளவிலான அலுவலக இடங்கள் குத்தகைக்கு எடுக்கப்பட்டு இருப்பதாக ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று வெளியிட்ட தரவு சுட்டிக்காட்டுகிறது. இது 2023 ஆம் ஆண்டை விட 13 சதவீதம் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் அலுவலகம் சார்ந்த ரியல் எஸ்டேட் துறை மந்த நிலையில் இருக்கும்போது இந்தியாவில் மட்டும் இந்த பிரிவு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் திறன்மிகு ஊழியர்கள் அதிகரித்திருப்பதும் பன்னாட்டு நிறுவனங்களின் கிளைகள் அதிகரித்து வருவதும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+