சரிந்தது இமயம்.. IBM பங்குகள் 1987க்கு பின் மோசமான சரிவு.. ஒரே நாளில் 22% சரிந்தது!

டெக் உலகில் 100 வருடங்களை கடந்து இயங்கி வரும் வெகு சில நிறுவனங்களில் மிகவும் முக்கியமானவை ஐபிஎம், இன்று நாம் பயன்படுத்தும் வங்கி சேவை முதல் விமான சேவை வரையில் அனைத்தும் ஐபிஎம் நிறுவனத்தின் தொழில்நுட்பம் தான் அடித்தளம்.

இத்தகைய மாபெரும் நிறுவனம் கடந்த 10-15 ஆண்டுகளாக வேகமாக மாறி வரும் டெக் உலகில் தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறி வந்த நிலையில் 2020ல் அரவிந்த் கிருஷ்ணா சிஇஓ-வாக பதவியேற்றிய நாளில் இருந்து வேகமாக வளர்ச்சி அடைய துவங்கியது.

சரிந்தது இமயம்.. IBM பங்குகள் 1987க்கு பின் மோசமான சரிவு.. ஒரே நாளில் 22% சரிந்தது!

இந்த நிலையில் தான் ஏஐ என்ற பெரும் பூதம் மொத்த டெக் துறையை ஆட்டிப்படைக்க துவங்கியுள்ளது, இதன் முதல் தடுமாற்றமாக 2026ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் ஐபிஎம் நிறுவனத்தின் வருவாய் 17.86 பில்லியன் டாலராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 17.2 பில்லியன் டாலர் அளவிலான வருவாய் மட்டுமே பெற்றுள்ளது.

இந்த சரிவக்கு அரவிந்த் கிருஷ்ணா சொல்லும் காரணம் தான் முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிறுவனங்கள் சாப்ட்வேர் சேவைகளுக்கான பட்ஜெட்டை அல்லது செலவுகளை குறைத்துவிட்டு ஏஐ ஹார்டுவேர் மற்றும் மெமரி சிப்களுக்கு அதிகளவில் முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.

இதனால் சாப்ட்வேர் மற்றும் மெயின்ப்ரேம் சேவைக்கான ஒதுக்கீடு செய்யப்படும் பட்ஜெட் குறைந்தது. இந்த தகவல் வெளியான அடுத்த சில நிமிடங்களில் ஐபிஎம் பங்குகள் எப்போதும் இல்லாத வகையில் 22 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.

இதன் செயின் ரியாக்ஷனாக HSBC ஐபிஎம் பங்குகள் மீதான ரேட்டிங்-ஐ குறைத்து விட்டு, அதன் டார்கெட் விலையை 191 டாலராகவும் குறைத்துள்ளது.

1987 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐபிஎம் பங்குகள் அதிகப்படியான 23 சதவீதம் சரிந்தது, அதன் பின்பு இப்போது ஒரே நாளில் 22 சதவீதம் சரிந்து முதலீட்டு சந்சையை அதிர செய்துள்ளது.

இதன் எதிரொலியாக மைக்ரோசாப்ட் பங்குகளும் 3 சதவீதம் சரிந்துள்ளது. சர்வீஸ்நவ் பங்குகள் 8 சதவீதமும், டெக் - சாப்ட்வேர் நிறுவன பங்குகளில் முதலீடு செய்யும் ஐஷேர்ஸ் ஈடிஎப் 4 சதவீதம் வரை சரிந்துள்ளது.

நாளை காலை இந்திய பங்குச்சந்தையில் டெக் பங்குகள் மீது எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் ஐடி நிறுவனங்கள் அனைத்தும் சேவை பிரிவை மட்டுமே நம்பியிருக்கும் காரணத்தால் பாதிக்கப்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது, இதேபோல் இந்திய ஐடி நிறுவனங்களின் பெரும் பகுதி வாடிக்கையாளர்கள் அமெரிக்க நிறுவனங்கள் தான்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+